மீண்டும் ரோஹித்தை மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக்குங்க – மனோஜ் திவாரி தைரியமான பேட்டி

0
231
Manoj Tiwary about Rohit Sharma

நேற்று நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்திற்கு சென்றுள்ளது. தொடர்ந்து மூன்று தோல்விகளை பெற்றதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது கடைசி இடத்தில் நீடிக்கிறது.

இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்ததற்குப் பிறகு மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது சொந்த மைதானத்தில் களமிறங்கியது. இருப்பினும் யாருமே எதிர்பாராத விதமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் வரிசை சோடை போனதால் 20 ஓவர்களில் அந்த அணியால் 125 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. அதிலும் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா ஆகியோர் 34 மற்றும் 33 ரன்கள் குவித்து இருந்தனர். இதற்குப் பிறகு குறைவான இலக்கை செஸ் செய்ய களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ரியான் பராக் சிறப்பாக விளையாடி 39 பந்துகளில் 54 ரன்கள் குவித்து வெற்றி பெற்று விட்டார். இப்போட்டியில் மூன்று விக்கட்டுகளை வீழ்த்தியதன் மூலம் போல்ட் ஆட்டநாயகன் விருதுகளை பெற்றார்.

ஐபிஎல் இன் தொடக்கத்தில் மிகவும் வலுவான அணி என்று கணிக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் தற்போது அனைத்து எதிர்பார்ப்புகளையும் உடைக்கும் விதமாக மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியை தவிர மற்ற அணிகள் அனைத்தும் முதல் வெற்றியைப் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற போட்டி போட்டுக் கொண்டிருப்பதால் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியைப் பெறவே திண்டாடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி செயல்பாடுகளும் மோசமாக இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் குஜராத் அணியில் கேப்டனாக இருந்தபோது பயிற்சியாளர் நெக்ரா அவருக்கு உறுதுணையாக இருந்தார். அதுபோல மும்பை இந்தியன்ஸ் அணியில் நெருக்கடியான சூழ்நிலையில் அவருக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்றும் வர்ணனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி கூறும்பொழுது

- Advertisement -

“மும்பை அணி நிர்வாகம் திரும்பவும் கேப்டன்சியை ஹர்திக் பாண்டியாவிடமிருந்து ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்கலாம். ஐந்து பட்டங்களை வென்ற ரோஹித் சர்மாவிடமிருந்து கேப்டன்சியை ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைத்ததன் மூலம் மும்பை அணி நிர்வாகம் முடிவுகளை எடுக்க தயங்குவதில்லை என்பது எனக்கு தெளிவாக புரிந்தது. கேப்டனை மாற்றுவது என்பது மிகப்பெரிய விஷயம்

இதையும் படிங்க: ஐபிஎல் 2024: வெறும் 2 நாளில்.. மயங்க் யாதவின் அதிவேக பந்து சாதனையை முறியடித்த மும்பை இந்தியன்ஸ் வீரர்

ஆனால் இந்த சீசனில் அவர்கள் இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்கவே இல்லை. மூன்று போட்டியிலும் தோல்வியையே தழுவி இருக்கிறார்கள். இது வெறும் துரதிஷ்டம் மட்டுமல்ல. பாண்டியாவின் கேப்டன்சி மும்பை அணிக்கு சிறப்பானதாக இல்லை” என்று கூறியிருக்கிறார்.