2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் மும்பை அணி தோல்வியை தழுவி இருந்தாலும், மும்பை அணியின் பேகப்பந்துவீச்சாளர் ஆன கோட்சே தனது வேகப்பந்து வீச்சின் மூலம் ஒரு மகத்தான சாதனையை படைத்திருக்கிறார்.
நேற்று மும்பையில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி முன்னணி வீரர்கள் சரியாக பங்களிக்கத் தவறியதால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் குவித்திருந்தது. அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிகபட்சமாக 34 ரன்கள் குவித்தார்.
பின்னர் 126 ரன்கள் குவித்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் இந்த இலக்கினை 15 ஓவர்களிலேயே கடந்து வெற்றி பெற்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முதல் மூன்று விக்கெட்டுகள் விரைவிலேயே வீழ்த்தப்பட்டாலும் அந்த அணியின் இளம் வீரான் பராக் சிறப்பாக விளையாடி 39 பந்துகளில் 54 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்று போட்டியிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் இருக்கிறது.
ஐபிஎல் 2024-ன் அதிவேக பந்து
இதற்கு முன்னர் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே ஆன டி20 போட்டியில் லக்னோ அணியின் அறிமுக வீரர் மயங்க் யாதவ் சிறப்பாக பந்து வீசி லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். மேலும் அப்போட்டியில் 155.8 கிலோமீட்டர் வேகத்தில் வீசி 2024 ஐபிஎல்லில் தனது அதிவேக பந்துவீச்சினை பதிவு செய்து முதலிடத்தில் வகித்தார். அந்த சாதனை பதிவு செய்த இரண்டு நாட்களிலேயே மும்பை அணி வீரர் கோட்சி நேற்று நடைபெற்ற போட்டியில் அவரது சாதனையை முறியடித்திருக்கிறார்.
நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீசிய கோட்சே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிவீரர் ரியான் பராக்கிற்கு 157.4 கிலோமீட்டர் வேகத்தில் வீசி சாதனை படைத்திருக்கிறார். மயங்க் யாதவ் சாதனை படைத்த இரண்டு நாட்களுக்குள்ளேயே தற்போது அந்த சாதனை கோட்சேவினால் முறியடிக்கப்பட்டிருக்கிறது. கோட்சே இன்னும் கொஞ்சம் வேகமாக வீசி இருந்தால் 2011ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஷான் டெயிட் வீசிய 157.71 சாதனையை முறியடித்து இருப்பார்.
தற்போது இந்த சாதனையின் மூலம் கோட்சே ஐபிஎல் வரலாற்றில் அதிக கிலோமீட்டர் வேகத்தில் வீசப்பட்ட பந்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மயங்க் யாதவே மூன்று முறை 150 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் வீசி இருக்கிறார். அவரது பந்து வீச்சில் முறையே 153.4, 153.9, 155.8 ஐ பதிவு செய்து இருக்கிறார்.
இதையும் படிங்க : ஏன்பா ஆர்சிபி அவரை போக விட்டீங்க.? – மும்பை ராஜஸ்தான் போட்டியின் போது வாட்சன் வருத்தம்
அதற்கு அடுத்த இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பர்கர் 153 கிலோமீட்டர் வேகத்தில் வீசி சாதனை படைத்திருக்கிறார். இந்தப் பட்டியலில் பெங்களூர் அணி வீரர் அல்ஜாரி ஜோசப் 151.2 கிலோமீட்டர் வேகத்தில் வீசி அதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். அவருக்குப் பிறகு சென்னை அணி வீரர் மதீஷா பத்திரானா 150.9 கிலோமீட்டர் வேகத்தில் வீசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது