கம்பீர் பயிற்சியாளராவதற்கு முன்பும் பின்பும் மாற்றி மாற்றி பேசி செயல்பட்டு வருவதாக இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.
தற்போது இந்திய டி20 அணிக்கு கில்லை தேர்வு செய்து ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரையும் தேர்வு செய்யாமல் போனது பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இதில் கம்பீர் பங்கு பெரிய அளவில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பயிற்சியாளர் ஆவதற்கு முன்பு கம்பீர் ஜெய்ஸ்வாலை மிகவும் ஆதரித்து பேசி இருக்கிறார். அதே சமயத்தில் அவர் பயிற்சியாளராக வந்ததும் இந்திய டி20 அணிக்கு ஜெய்ஸ்வாலை தேர்வு செய்யாமல் புறக்கணித்திருக்கிறார். இது அந்த வீரர்களை மனரீதியாக பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இதுகுறித்து மனோஜ் திவாரி பேசும்பொழுது “அணியில் தகுதியான இரண்டு வீரர்கள் விடுபட்டு இருக்கிறார்கள். ஒருவர் ஜெய்ஸ்வால், இன்னொருவர் ஸ்ரேயாஸ் ஐயர். தற்போதைய பயிற்சியாளர் கம்பீரின் பழைய வீடியோக்களை பார்த்தால் ஜெய்ஸ்வால் கூடிய விரைவில் இந்திய டி20 அணிக்குள் நுழைந்து விடுவார் என்று கூறியிருப்பார். அவரை டி20 கிரிக்கெட்டில் இருந்து விலக்கி வைப்பது மிகவும் தவறானது. தற்போது அதைத்தான் பயிற்சியாளர் ஆனதும் செய்திருக்கிறார்”
“கடந்த ஆண்டு உள்நாடு மற்றும் ஐபிஎல் செயல்பாட்டு அடிப்படையில் பார்த்தால் ஸ்ரேயாஸ் ஐயர் டி20 கிரிக்கெட்டுக்கு மிகவும் தகுதிவாய்ந்தவராக இருக்கிறார். பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். கொல்கத்தா அணியை பட்டம் வெல்ல வைத்தார். டி20 கிரிக்கெட்டில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை என்பது கண்களை திறக்கிறது”
இதையும் படிங்க : கில் என்கிட்ட வர முன்னாடியே.. 6 பேர் அவரைப் பற்றி ஒரு விஷயத்தை சொன்னாங்க – டிராவிட் தெரிவித்த தகவல்
“இதனால்தான் விளையாட்டு ஆர்வலர்கள் யாரை எதன் காரணத்திற்காக தேர்ந்தெடுத்தார்கள் கொண்டு தெரிந்து கொள்வதற்கு, தேர்வுக் குழு விவாத கூட்டத்தை வெளிப்படையாக நடத்தி நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கூறி வருகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.