இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மீதான மீடியா மற்றும் கமெண்டேட்டர்களின் விமர்சனங்கள் குறித்து இந்திய பௌலிங் கோச் மோர்னே மோர்கெல் கருத்து தெரிவித்துள்ளார்.
அணி நிர்வாகத்தின் திட்டப்படி, ஆட்டத்தில் விக்கெட்டுகள் விழாத சூழ்நிலைகளில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் மற்றும் பேஸ் பயன்படுத்தி ரன்களை விட்டுக்கொடுத்தாலும் பரவாயில்லை என்று பிரசித் கிருஷ்ணாவிடம் அட்டாக்கிங் பௌலிங் செய்யுமாறு கோச்சிங் ஸ்டாஃப் கேட்டுக்கொண்டனர். இதன் காரணமாகவே சில போட்டிகளில் அவர் அதிக ரன்களை வழங்கி விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது.
இதுகுறித்து இந்திய பௌலிங் கோச் மோர்னே மோர்கெல் பேசும்போது, “பிரசித் கிருஷ்ணாவின் கேரக்டர் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. மீடியா மற்றும் கமெண்டேட்டர்கள் அவர் மீது கடுமையாக விமர்சனங்களை வைத்தபோதும் அதை எதிர்கொண்டு மீண்டும் களத்தில் சிறப்பான முறையில் பௌலிங் செய்து தனது திறமையை நிரூபித்திருக்கிறார். அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரும் பில்லியன் கிரிக்கெட் ஃபேன்ஸை திருப்திப்படுத்த வேண்டும் என்ற பிரஷரில் இருக்கும்போது வெளிப்புற விமர்சனங்களை புறக்கணிப்பது மிகவும் அவசியமான ஒன்று” என்று கூறி இருக்கிறார்.
மேலும் பிரசித் கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்ட ரோல் குறித்து மோர்னே மோர்கெல் தொடர்ந்து பேசும்போது, “சில நேரங்களில் அணி நிர்வாகம் அவரிடம் ஒரு குறிப்பிட்ட கடினமான வேலையை, அதாவது கழுதை செய்யும் வேலையை (டாங்கி ஜாப் )செய்யுமாறு கேட்கிறது. பிட்சில் பந்துவீச்சாளர்களுக்கு பெரிய உதவி இல்லாத போது எக்ஸ்ட்ரா பேஸ் மற்றும் பவுன்ஸ் வைத்து விக்கெட்டுகளை உருவாக்க முயற்சிப்பது ரிஸ்க் நிறைந்தது. இதில் ரன்கள் போனாலும் அணியின் ஒட்டுமொத்த ஆதரவும் அவருக்கு இருக்கிறது. ஹோட்டல் ரூமில் நாங்கள் ஆலோசிக்கும்போது அவருக்கு தேவையான க்ளாரிட்டி மற்றும் கான்ஃபிடன்ஸ் கொடுக்கிறோம், தற்போது அவர் ஒரு வேர்ல்ட் கிளாஸ் பௌலராக வளர்ந்து வருகிறார்” என்று கூறி இருக்கிறார்.