தற்போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் இந்தியா அண்டர் 19 அணிக்கு வருவதற்கு முன்பாகவே தனக்கு தெரியும் என, இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்திருக்கிறார்.
ராகுல் டிராவிட் பயிற்சியில் பிரித்திவி ஷா தலைமையில் இந்தியா அண்டர் 19 அணி உலக கோப்பையை வென்று இருந்தது. அந்த அணியில் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக சுப்மன் கில் இருந்தார்.
இருவரும் முக்கியமானவர்கள்
இந்த நிலையில் இந்திய அண்டர் 19 மற்றும் இந்திய ஏ அணிக்கு பயிற்சி அளித்த காலங்கள் மற்றும் இந்தியாவில் இருந்து எப்படியான இளம் திறமைகள் உருவாகி வருகிறார்கள் என்பது குறித்து ராகுல் டிராவிட் ரவிச்சந்திரன் அஸ்வின் உடனான யூடியூப் உரையாடலின் போது தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பேசி உள்ள ராகுல் டிராவிட் “வெளிப்படையாகவே பிரித்திவி ஷா மற்றும் கில் பற்றி நிறைய நல்லவிதமான பேச்சுகள் வெளியில் இருந்தது. பலர் கில்லை கண்டுபிடித்து இருந்தார்கள். நான் எங்கு சென்றாலும் அவர் குறித்து என்னிடம் கேட்கப்பட்டது. வைபவ் சூர்யவன்சி மற்றும் ஆயுஸ் மத்ரே போன்ற சிறப்பான வீரர்கள் உருவாகி வரும் பொழுது அவர்கள் பல பயிற்சியாளர்களை கடந்து வந்திருக்கிறார்கள்”
ஆறு பேர் சொன்னார்கள்
“நான் கில்லை பார்ப்பதற்கு முன்பாகவே அவர் குறித்து என்னிடம் ஒரு ஆறு பேர் அவருடைய திறமை குறித்து பேசி இருந்தார்கள். ஏனென்றால் இந்திய அமைப்பில் ஒரு வீரர் பலரையும் தாண்டி வருவதால் இது நடக்கிறது”
இதையும் படிங்க : உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா.. தொடர்ந்து 5வது முறையாக ஒருநாள் தொடரை வென்ற தென்னாப்பிரிக்கா!
“ரியான் பராக் கூட இப்படி அறியப்பட்டார். நான் 18 வயதில் சாம்சனை பார்த்த பொழுது இது நடந்தது. உண்மையில் ஒரு குழந்தை வாவ் சொல்ல வைக்காது. ஆனால் இந்திய கிரிக்கெட்டில் அப்படி ஒரு குழந்தை உங்களை வாவ் சொல்ல வைக்கிறது. ஐபிஎல் சோதனை என்பது வரக்கூடிய குழந்தைகளை பார்க்கும் போது, இப்படியான திறமைகள் எங்கிருந்து வருகின்றன என்று ஆச்சரியமாக இருக்கிறது” என தெரிவித்திருக்கிறார்.






