இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்திற்கு பிறகு, இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும் முன்னாள் ஆர்சிபி வீரருமான கே.எஸ். பரத், ஷுப்மன் கில்லின் கேப்டன்ஷிப் மற்றும் விராட் கோலியின் தாக்கம் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
கொழும்புவில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில், களத்தில் இந்திய வீரர்கள் எதிரணி பேட்டர்களை நோக்கித் தொடர்ந்து பேசி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். முன்னாள் கேப்டன் விராட் கோலி தலைமையில் இந்திய அணி விளையாடிய போது களத்தில் இருந்த அதே போன்ற ஒரு சூழல் தற்போது ஷுப்மன் கில் தலைமையிலும் வெளிப்படுவதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
போட்டியில் ஷார்ட் லெக் திசையில் ஃபீல்டிங் செய்த சர்பராஸ் கான் இலங்கை பேட்டர்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். அதேபோல வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜும் எதிரணி பேட்டரான கமில் மிஷாராவை நோக்கித் தன் ஆக்ரோஷத்தைக் காட்டினார். களத்தில் வீரர்களின் இந்த செயல்பாடு விராட் கோலியின் தலைமைப் பண்பை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருந்தது.
இதுகுறித்து கே.எஸ். பரத் பேசும்போது “ஃபீல்டிங்கின் போது ஷார்ட் லெக்கில் நிற்கும் ஃபீல்டர்கள் அனைவரும் மிகவும் வோக்கலாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள். விராட் கோலி அணியை லீட் செய்தபோது இதே போன்ற விஷயத்தைப் பார்க்க முடிந்தது. அவர் வீரர்கள் தங்களை சுதந்திரமாக வெளிப்படுத்த அனுமதித்தார். அந்த பேட்டன் தற்போது விராட்டிடமிருந்து ஷுப்மன் கில்லிற்கு தெளிவாக மாற்றப்பட்டுள்ளது. சர்பராஸ் கான் மற்றும் சிராஜ் ஆகியோர் பேட்டர்களிடம் தொடர்ந்து செர்ப்பு செய்வதை நீங்கள் தெளிவாகப் பார்க்க முடியும்” என்று கூறி இருக்கிறார்.