வாங்கற சம்பளத்துக்கு கொஞ்சமாவது பேட்டிங் பண்ணனும்.. டீம் நம்பிக்கையை கெடுக்கக்கூடாது – மனோஜ் திவாரி விமர்சனம்

0
17
Manoj

நேற்று ஆர்சிபி அணி தனது சொந்த மைதானமான பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் லக்னோ அணிக்கு எதிராக மிக மோசமாக விளையாடி 28 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் எல்லோரும் சொதப்பினார்கள். குறிப்பாக நான்கு போட்டிகளாக மேக்ஸ்வெல் மிக மோசமாக விளையாடி வருகிறார்.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்று பந்து வீசிய ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு 181 ரன்கள் விட்டுக் கொடுத்தது. பந்துவீச்சில் நிக்கோலஸ் பூரன் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை தவறவிட்டு, 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டிய லக்னோ அணிக்கு 180 ரன் கொடுத்தது.

- Advertisement -

இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பொழுது ஓரளவுக்கு துவக்க ஜோடி சுமாராக ஆரம்பித்தாலும் கூட, அதற்குப் பிறகு வந்தவர்கள் யாரும் பொறுப்பு எடுத்துக் கொண்டு விளையாடவே இல்லை. மேக்ஸ்வெல் இந்த போட்டியிலும் ரன் ஏதும் இல்லாமல் ஆட்டம் இழந்தார். கடந்த மூன்று போட்டிகளில் அவர் 0,3,28 என சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்.

ஒட்டுமொத்த பேட்டிங் யூனிட்டில் எல்லோரும் சுமாராக விளையாடும் பொழுது இவர் மோசமாக விளையாடுவது அந்த அணியை மிகவும் பாதிக்கிறது. அதே சமயத்தில் மிகவும் கடினமான பினிஷிங் இடத்தில் இளம் வீரர்களை நம்பி அந்த அணி இருப்பதும் பெரிய பிரச்சனைகளை உருவாக்குகிறது. ஒரு போட்டியில் நன்றாக விளையாடக் கூடியவர்கள் அதற்கு அடுத்து விளையாடுவதில்லை.

இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி கூறும் பொழுது “ஆர்சிபி எப்பொழுதும் சிறந்த பேட்டிங் யூனிட்டை வைத்திருக்கும் அணியாக கருதப்படுகிறது. ஆனால் பேட்டிங் செயல்பாட்டை கொடுப்பதில் அந்த அணி தோல்வி அடைந்திருக்கிறது. அவர்கள் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் சரியான முறையில் செயல்படவில்லை. மிடில் வரிசையில் அனுஜ் ராவத் ஒரு போட்டியில் நன்றாக விளையாடிவிட்டு மற்ற எந்த போட்டியிலும் நன்றாக விளையாடவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : உம்ரான் மாலிக் மயங்க் யாதவ் வித்தியாசம் இதுதான்.. இந்த பையன் சர்வதேச கிரிக்கெட் விளையாடனும் – சேவாக் பேட்டி

இவர் ஒரு இளம் வீரர் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் உங்கள் அணியில் உலகத் தரமான பேட்ஸ்மேன்கள் உங்களை சுற்றி இருக்கிறார்கள். இந்த நீங்கள் அவர்களிடம் இருந்து நல்ல அனுபவத்தையும் ஆலோசனைகளையும் பெற்று இருக்க வேண்டும். ஆனால் இப்பொழுதும் நீங்கள் சரியாக செயல்படாவிட்டால், நீங்கள் எதையும் கவனிக்கவில்லை என்று அர்த்தம். மேக்ஸ்வெல்லை அந்த அணி நிர்வாகம் தொடர்ந்து தக்க வைப்பதின் மூலம் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. ஆனால் அவர் வெறுமனே சம்பளம் மட்டும் வாங்கிக் கொண்டு, நல்ல பெர்ஃபார்மன்ஸை கொடுப்பதே கிடையாது” என்று கூறியிருக்கிறார்.