உம்ரான் மாலிக் மயங்க் யாதவ் வித்தியாசம் இதுதான்.. இந்த பையன் சர்வதேச கிரிக்கெட் விளையாடனும் – சேவாக் பேட்டி

0
25
Sehwag

தற்பொழுது 17வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மே மாதம் 26 ஆம் தேதி ஐபிஎல் தொடர் முடிவுக்கு வருகிறது. அதே சமயத்தில் ஜூன் மாதம் ஆரம்பத்தில் துவங்கும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி இந்த மாதம் ஏப்ரல் இறுதி வாரம் வெளியிடப்படும் என தெரிகிறது.

இதன் காரணமாக தற்பொழுது டி20 உலகக்கோப்பை இந்திய அணி எப்படி அமையும் என்கின்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக விராட் கோலி இடம் பெறுவாரா? என்பதும், விக்கெட் கீப்பர்களாக யார் இடம் பெறுவார்கள்? என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் முக்கிய விஷயமாகும்.

- Advertisement -

அதே சமயத்தில் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது அதிவேக பந்துவீச்சால் மயங்க் யாதவ் பேட்ஸ்மேன்களை திணறடித்துக் கொண்டிருக்கிறார். இரண்டு போட்டியில் விளையாடியிருக்கும் அவர் மொத்தம் ஆறு விக்கெட்டுகளையும், இரண்டு ஆட்டநாயகன் விருதையும் வென்று, இந்தியா தாண்டி பல கிரிக்கெட் வீரர்களின் கவனத்தையும் திருப்பி இருக்கிறார்.

இதன் காரணமாக நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக இவர் விளையாடுவாரா? அஜித் அகர்க்கர் தலைமையிலான தேர்வுக் குழு இவரை கொண்டு வருமா? என்பதும் சுவாரசியமான கேள்வியாக ரசிகர்களிடையே மாறியிருக்கிறது. சில இந்திய முன்னாள் வீரர்கள் வெளிப்படையாக இவரை தேர்வு செய்யலாம் என்றும் கூறி வருகிறார்கள்.

இதேபோல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் அதிவேக பந்துவீச்சால் கவனம் ஈர்த்த உம்ரான் மாலிக் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு பெற்றார். ஆனால் அதற்குப் பிறகு அவரது செயல்பாடு சீராக இல்லாத காரணத்தினால், தற்பொழுது இந்திய அணியில் மட்டும் இல்லாமல் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியிலும் வாய்ப்பு பெற முடியாமல் இருந்து வருகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : 6.40 கோடி.. லக்னோ அணியில் இருந்து நட்சத்திர வீரர் விலகல்.. திடீரென ஏற்பட்ட பெரிய பின்னடைவு

இவர்கள் இருவருக்குமான வேறுபாட்டை சுட்டிக்காட்டி பேசிய வீரேந்திர சேவாக் கூறும்பொழுது ” மயங்க் யாதவுக்கும் உம்ரான் மாலிக்குக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் லைன்தான். உம்ரான் மாலிக் நல்ல வேகமாக பந்து வீசுகிறார் ஆனால் அவரிடம் லைன் அண்ட் லென்த்தில் கட்டுப்பாடு இல்லை. அதே சமயத்தில் மயங்க் யாதவ் லைன் அண்ட் லென்த்தில் நல்ல கட்டுப்பாட்டையும் துல்லியத்தையும் வைத்திருக்கிறார். அவருக்கு அவருடைய வேகம் குறித்து தெளிவாகத் தெரிகிறது. நீங்கள் லைனில் கட்டுப்பாட்டை இழக்கும் பொழுதுதான் பவுண்டரியை கொடுப்பீர்கள். எனவே இந்த ஒரு காரணத்திற்காக ஐபிஎல் தொடர் முடிந்து அவர் சர்வதேச கிரிக்கெட் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.