“எனக்கு மட்டும் இல்ல பெருமையை இவங்களுக்கும் கொடுங்க.. என் பிளான் இதுதான்” – ஆட்டநாயகன் துருவ் ஜுரல் பேட்டி

0
1917
Jurel

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில், இந்திய அணிக்காக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் துருவ் ஜுரல் அறிமுகமானார்.

அறிமுகமான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் முதல் இன்னிங்சில் தேவையான நேரத்தில் 46 ரன்கள் எடுத்து கவனிக்க வைத்திருந்தார். ஆனால் நான்காவது டெஸ்ட் போட்டியில் அதாவது அவருடைய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதையும் தற்போது வென்று விட்டார்.

- Advertisement -

இந்திய அணி இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஏழு விக்கெட் இழந்து தடுமாறிய பொழுது, அணியை 37 ரன்களுக்கு 90 ரன்கள் குவித்து கொண்டு வந்தார். குல்தீப் யாதவ் மற்றும் ஆகாஷ் தீப் இருவருடனும் சேர்த்து நூறு ரன்களுக்கு மேல் கொண்டு வந்தார்.

இதற்கடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 120 ரன்களுக்கு ஐந்து விக்கெட் இழந்து தடுமாறிய பொழுது, கில் உடன் இணைந்து ஆட்டம் இழக்காமல் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொண்டு வந்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

பொறுப்பை உணர்ந்து, பேட்டிங் செய்வதற்கு கடினமான ஆடுகளத்தில், நெருக்கடியான நிலையில் இரண்டு இன்னிங்ஸ் சிறப்பாக விளையாடிய காரணத்தினால் ஆட்டநாயகன் விருது இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

ஆட்டநாயகன் விருது பெற்ற துருவ் ஜுரல் கூறும் பொழுது “சூழ்நிலை எப்படி இருக்கிறதோ அதற்கு ஏற்றபடி நான் விளையாட விரும்புகிறேன். நாங்கள் முதல் இன்னிங்ஸில் நல்ல ரன்கள் எடுத்தால் இரண்டாவது இன்னிங்ஸில் குறைவான ரன்கள் எடுப்பது போதுமானதாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நாங்கள் முதல் இன்னிங்ஸில் விரைவாக விக்கெட்டுகளை இழந்து விட்டோம்.

இதன் காரணமாக நான் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களுடன் பேட்டிங் செய்ய வேண்டியதாக இருந்தது. அதே சமயத்தில் அவர்களிடம் இருந்தும் ரன்கள் கிடைத்தது. எனவே இதற்கான பெருமை அவர்களுக்கும் போய் சேர வேண்டும்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் மற்றும் மார்க் வுட் இருவருக்கும் எதிராக விளையாடியது சிறப்பான அனுபவம். இவர்களை நான் டிவியில் பார்த்துதான் வந்திருக்கிறேன்.

இதையும் படிங்க : “இந்தியா 5 விக்கெட்டில் ஜெயிச்சிருக்கலாம்.. ஆனா என் டீம்க்குதான் பெருமை” – பென் ஸ்டோக்ஸ் பேச்சு

பந்துவீச்சாளர் யார் என்று பார்க்காமல் பந்தில் கவனம் செலுத்தி விளையாடுவதுதான் என் முடிவு. கில் உடன் இணைந்ததும் எங்களுடைய டார்கெட்டை நாங்கள் மிகச் சிறியதாக வைத்துக் கொள்ள முடிவு செய்தோம். பத்து பத்து ரன்களாக இலக்கை துரத்துவது என்னுடைய திட்டம்” என்று கூறியிருக்கிறார்.