“இந்த பையன டெஸ்ட் கிரிக்கெட்லயும் விளையாட வைங்க.. ரேர் டேலண்ட்..!” – நெக்ரா வலியுறுத்தல்!

0
6781
ICT

இந்திய கிரிக்கெட் மிக வேகமாக சில வருடங்களுக்கு சில குறிப்பிட்ட இளம் வீரர்களின் கைகளுக்கு செல்ல இருக்கிறது.

இதில் முக்கியமான வீரர்களாக கில், ருதுராஜ், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங் ஆகிய இளம் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

இவர்கள் சில வருடங்கள் இந்திய அணிக்கு வெளியே இருந்தது கூட, இந்திய அணி எவ்வளவு வலிமையான வீரர்களை வெளியே வைக்கும் அளவுக்கு செழிப்பான கிரிக்கெட்டை கொண்டு இருக்கிறது என்பதற்கான சாட்சியாகத்தான் இருந்தது.

குறிப்பாக உலகக் கோப்பைக்கு தேர்வாகாத ருத்ராஜ், அதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அபாரமான ஒரு அரை சதம் அடித்த பின்பு, அணியில் இடமில்லாமல் ஆசிய விளையாட்டு தொடருக்கு சென்றார்.

- Advertisement -

தற்போது கிரிக்கெட்டில் வேற எந்த நாடுகளாக இருந்தாலும் ருதுராஜ் மாதிரியான வீரர் வெளியே இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு பெற்ற அவர், முதல் போட்டியில் பந்தை சந்திக்காமலே ஆட்டம இழந்தார். இதற்கு அடுத்து இரண்டாவது போட்டியில் அரை சதமும், மூன்றாவது போட்டியில் அதிரடியாக சதமும் அடித்தார்.

இந்த நிலையில் இவரைப் பற்றி பேசி உள்ள குஜராத் டைட்டன்ஸ் பயிற்சியாளர் நெக்ரா கூறும்பொழுது “அவர் எப்படிப்பட்ட வீரர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஜெயஸ்வால் உடன் ஒப்பிடும் பொழுது ருத்ராஜ் மிகவும் வித்தியாசமான வீரர். அவரது ஆட்டம் முற்றிலும் வேறுபட்டது.

டி20 கிரிக்கெட் விளையாட திடத்தன்மை தேவை. அதைத்தான் நேற்று ருத்ராஜ் வெளிக்காட்டினார். அவர் இந்தியாவிற்கு மூன்று வடிவ கிரிக்கட்டிலும் விளையாட வேண்டிய வீரர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

அவர் பேட்டிங்கில் காட்டும் நேர்த்தி நம்ப முடியாதது மேலும் ஆச்சரியமானது. மேலும் அவர் நேற்று அடித்த டி20 கிரிக்கெட் சதம் என்பது மிகச் சிறந்த ஒன்று!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -