“மகி அண்ணன் இந்த விஷயத்தில் கிங்” – தோனி குறித்து டேவான் கான்வே பெருமிதம்!

0
6728

இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது . லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பெற்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன .

20 புள்ளிகளுடன் குஜராத் அணி முதலிடத்திலும் 17 புள்ளிகள் உடன் இரண்டாம் இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணியும் இன்று நடைபெற இருக்கும் முதலாவது பிளே ஆப் சுற்றில் விளையாட இருக்கின்றன . இந்தப் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது .

- Advertisement -

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் இந்தப் போட்டியில் தோல்வியடையும் அணி நாளை நடைபெற இருக்கும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் வெள்ளிக்கிழமை குவாலிபயர் 2 வில் விளையாடும் .

இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவே சென்னை மற்றும் குஜராத் அணிகள் தீவிரமாக முயற்சி செய்யும் என்பதால் இந்த போட்டி பரபரப்பானதாக இருக்கும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருப்பதால் சிஎஸ்கே அணிக்கு கூடுதல் சாதகமாக இது அமைந்திருக்கிறது . இருந்தாலும் இந்த ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணி மற்ற அணிகளை விட பலம் வாய்ந்த அணியாகவே இருக்கிறது .

இந்நிலையில் போட்டிக்கு முன்பாக நேற்று சிஎஸ்கே டிவியில் பேட்டியளித்திருக்கிறார் அந்த அணியின் துவக்க வீரர் டெவான் கான்வே . இந்தப் போட்டி குறித்து பேசி இருக்கும் அவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தனது முதல் பிளே ஆப்பில் விளையாட மிகவும் ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்தார் . மேலும் ருத்ராஜுடன் இணைந்து துவக்க வீரராக களம் இறங்குவது மிகவும் உற்சாகமான விஷயம் எனக் கூறினார் . ஒருவர் மற்றவருடைய ஆட்டத்தை பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பதால் எங்களுக்குள் புரிந்துணர்வு நன்றாகவே இருக்கிறது என கூறினார் . இதன் காரணமாக அதிகமான பார்ட்னர்ஷிப்புகளை இருவரும் அமைத்ததாகவும் தெரிவித்தார் .

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” அஜிங்கிய ரகானே இந்த தொடரில் மிகச் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்று கூறினார் . அவரும் தொடர்ச்சியாக ரன்களை குவிப்பது அணிக்கு கூடுதல் பலமாக இருப்பதாக தெரிவித்தார் . மேலும் மிடில் ஆர்டரில் களம் இறங்கும் சிவம் தூபே அணிக்கு தேவையான அதிரடியை வழங்குவதாகவும் கூறினார் . இறுதிக்கட்டத்தில் ஆட வரும் மகிபாய் ஃபினிஷிங் கிங் என தெரிவித்த கான்வே அவரும் ரவீந்திர ஜடேஜாவும் இறுதி கட்டத்தில் ஆட வருவது முன்கல ஆட்டக்காரர்கள் நம்பிக்கையுடன் ஆடுவதற்கு வழிவகிக்கிறது என தெரிவித்தார் .

மேலும் தங்களிடம் உலகத்தரம் வாய்ந்த மூன்று ஸ்பின்னர்கள் இருப்பதால் எதிரணியினரால் 7 ஓவர் முதல் 15 ஓவர்களுக்குள் விரைவாக ரன் குவிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதாகவும் தெரிவித்தார். அனைத்து வீரர்களும் நல்ல பார்மில் இருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற்று நிச்சயமாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவோம் என கூறி தனது பேட்டியை முடித்துக் கொண்டார் டேவான் கான்வே. .