388 ரன்.. கேப்டன் ருதுராஜ் சதம்.. சிஎஸ்கே வெளியிட்ட உணர்ச்சிபூர்வமான வாழ்த்து.. ரஞ்சி டிராபி 2024

0
41
Ruturaj

நடப்பு ரஞ்சி டெஸ்ட் டிராபி சீசனில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் மகாராஷ்டிரா அணியின் கேப்டன் ருதுராஜ் அதிரடியாக சதம் அடித்து இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து அணியை காப்பாற்றி இருக்கிறார்.

இந்திய வெள்ளைப்பந்து அணிகளின் செட்டப்பில் இருந்து கம்பீர் மற்றும் ரோகித் சர்மா என இருவருமே ருதுராஜை வெளியில் வைத்திருக்கிறார்கள்.தற்போது அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் டெஸ்ட் வடிவத்தில் கேப்டனாக சில தொடர்களில் செயல்பட்டு கொண்டு வருகிறார். ஆனால் பேட்டியில் இருந்து பெரிய ரன்கள் எதுவும் வராமல் இருந்து வந்தது.

- Advertisement -

முதல் இன்னிங்ஸ் டக் அவுட்

இந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியின் முதல் இன்னிங்சில் கேப்டன் ருதுராஜ் டக் அவுட் ஆனார். அவருடைய மகாராஷ்டிரா அணி 126 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. அடுத்து விளையாடிய மும்பை அணி ஸ்ரேயாஸ் ஐயர் சதத்தில் 441 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் மகாராஷ்டிரா அணி மும்பை அணிக்கு எதிராக இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. மேலும் தனிப்பட்ட முறையில் உள்நாட்டு கிரிக்கெட்டில் பெரிய அளவில் ரன்கள் எடுக்க முடியாமல் ருதுராஜ் தொடர்ந்து தடுமாறிக் கொண்டு வந்தார். ஆஸ்திரேலிய தொடருக்கு அவரை மூன்றாவது துவக்க ஆட்டக்காரராக கம்பீர் எடுத்துச் செல்வதில் பெரிய பிரச்சனைகள் உண்டாகி இருந்தது.

- Advertisement -

இரண்டாவது இன்னிங்ஸ் அதிரடி சதம்

இந்த நிலையில் மகாராஷ்டிரா அணியின் கேப்டன் ருதுராஜ் பேட்டிங்கில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி 171 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 145 ரன்கள் எடுத்தார். மகாராஷ்டிரா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 388 ரன்கள் எடுத்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது.

இதைத் தொடர்ந்து மூன்றாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பில்லாமல் 13 ரன்கள் எடுத்திருக்கிறது. மேலும் அந்த அணியின் வெற்றிக்கு நாளை நான்காவது நாளில் 61 ரன்கள் மட்டுமே தேவையாக இருக்கிறது. இந்த போட்டியில் ருதுராஜின் மகாராஷ்டிரா அணி தோல்வி அடைவது ஏறக்குறைய உறுதியாகியும் இருக்கிறது.

இதையும் படிங்க : நானே சொல்றேன் சிராஜ் வேண்டாம்.. அந்த திறமை இருக்க ஆகாஷ் தீப் வரணும் – ஆர்சிபி முன்னாள் கோச் மைக் ஹெசன் கருத்து

இந்த நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் ருதுராஜ் சதம் அடித்ததற்காக “கம்பேக் செஞ்சுரி கேப்டன். இந்த மூன்று வார்த்தைகளில் ருதுராஜை வரையறுக்கலாம்” என்று உணர்ச்சிப்பூர்வமாக வாழ்த்து தெரிவித்திருக்கிறது. ருதுராஜ் இந்திய அணிக்கு தேர்வாகாதது தனிப்பட்ட முறையில் சிஎஸ்கே அணிக்கும் பின்னடைவான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -