நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படாத முகமது சிராஜ் இடத்தில் ஆகாஷ் தீப் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆர்சிபி முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹசன் கூறியிருக்கிறார்.
அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சென்று அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட இருக்கும் நிலையில், முகமது சமியும் இல்லாத நிலையில் முகமது சிராஜ் பந்துவீச்சு மிகவும் கவலை தருவதாக இந்திய அணி நிர்வாகத்திற்கு அமைந்திருக்கிறது.
திடீரென மாறிய திறமை
முகமது சிராஜ் கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இருந்து விக்கெட் கைப்பற்றுவதற்கு மிகவும் தடுமாறி வருகிறார். அதற்கு முன்பு மிகச் சிறப்பான முறையில் பந்துவீச்சில் மாற்றங்கள் செய்து விக்கெட் கைப்பற்றி கவனத்தை ஈர்த்த அவர் திடீரென விக்கெட் டேக்கிங் எபிலிட்டியை இழந்தது இந்திய அணி நிர்வாகத்திற்கு பெரிய கவலையாக மாறி இருக்கிறது.
இன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக பந்துவீச்சில் காலை நேரத்தில் விக்கெட் கைப்பற்றுவதற்கான சூழல் இருந்த பொழுதிலும் கூட முகமது சிராஜ் பந்துவீச்சில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. பும்ரா மட்டுமே அந்த சூழ்நிலையை பயன்படுத்தி இரண்டு விக்கெட் கைப்பற்றினார். எனவே அடுத்த டெஸ்ட் போட்டியில் சிராஜ் இருப்பது கடினம் என்ற சூழல் உருவாகி இருக்கிறது.
ஆர்சிபி முன்னாள் கோச் கருத்து
இது குறித்து ஆர்சிபி அணியின் முன்னாள் கோச் மைக் ஹெசன் கூறும்பொழுது “ஆகாஷ் தீப் வீசுவதற்கு கடினமாக ஓடக்கூடியவராக இருப்பதால் அவர் ஆடுகளத்தில் பந்தை நன்றாக அடித்து வீசுவார் என்று நான் நினைக்கிறேன். மேலும் அவருக்கு விக்கெட் எடுக்கும் திறமையும் இருக்கிறது. எனவே சிராஜ் இடத்தில் ஆகாஷ் தீப் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு வருவது பற்றி இந்திய அணி நிர்வாகம் விவாதிக்கும் என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க : சர்ப்ராஸ் கானின் ஸ்பெஷலே வேற.. 17 வருஷத்துக்கு முன்ன நான் அதை பார்த்தேன் – அஜய் ஜடேஜா பாராட்டு
“ஆகாஷ் தீப் மிகவும் வித்தியாசமான ஒரு பந்துவீச்சாளர். அவர் மிக விரைவாக ஓடி வரக்கூடியவர். மேலும் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அவர் பந்து உங்களிடம் வேகமாக வந்து சேரும். எனவே பேட்டை பந்தால் கடுமையாக வந்து தாக்குவார். அவருக்கு எதிராக பேட்டிங் செய்வது கொஞ்சம் கடினமான விஷயம்” என்று கூறியிருக்கிறார்.






