“உனக்கு அதிர்ஷ்டம்பா.. திலக் வர்மா இடத்துல நீ ஒட்டிக்கிட்ட!” – ஆஸி லெஜன்ட் கடுமையான விமர்சனம்!

0
6354
Moody

மிகவும் பரபரப்பான எதிர்பார்ப்புகளுக்கு இடையே, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று மதியம் அறிவிக்கப்பட்டது.

உலகக்கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணி குறித்து பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் இருந்து வருகிறது. இருப்பதில் சிறப்பான பதினைந்து பெயர்களைக் கொண்டு இந்த அணி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக இந்திய கேப்டன் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த உலகக் கோப்பை இந்திய அணி தேர்வில் மிக முக்கியமாக விவாதிக்கப்படும் விஷயங்களாக சாகல் அணியில் இல்லாதது, ஆப் ஸ்பின்னர்கள் அணியில் இல்லாதது என்று இரண்டு விஷயங்கள் பேசப்பட்டு வருகிறது.

அதே சமயத்தில் ஒரே ஒரு வீரர் குறித்துதான், இவர் ஏன் அணியில் இருக்கிறார்? என்று பேசப்பட்டு வருகிறது. அவர் டி20 கிரிக்கெட்டில் உலக அணிகள் எல்லாம் பயப்படும் அளவுக்கு விளையாடக்கூடிய சூரியகுமார் யாதவ்.

- Advertisement -

சூரியகுமார் யாதவை எடுத்துக் கொண்டால் அவர் டி20 கிரிக்கெட்டில் சச்சினும் ஏபிடியும் கலந்த கலவை. அதேசமயத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் எடுத்துக் கொண்டால், அவர் சாதாரண பேட்ஸ்மேன் கூட கிடையாது. அப்படித்தான் புள்ளி விபரங்கள் காட்டுகிறது.

ரன் தேவை மிக அதிகமாக இருக்கின்ற கிரிக்கெட்டில் மிக அனாயசமாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேனாக சூரியகுமார் யாதவ் இருக்கிறார். அதே சமயத்தில் ரன் தேவை குறைவாக இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், அதற்கேற்ற பொறுமையையும், ஷாட் தேர்வையும் அவரால் கொண்டு இருக்க முடியவில்லை.

தற்போது உலகக்கோப்பை அணியில் இவருக்கு இடம் தரப்பட்டு இருப்பது குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் டாம் மூடி “திலக் வர்மா போன்ற ஒரு வீரருக்கு எதிராக இருந்து அவருக்கு பதிலாக இவர் அணியில் இருப்பது, முழுக்க முழுக்க அதிர்ஷ்டமே. அவர் மிடில் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேனாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பகுதி நேரமாக ஆப் ஸ்பின் வீசக்கூடியவராகவும் இருப்பார்.

தற்பொழுது இடதுகை வீரரான இஷான் கிஷான் சிறப்பாக பேட்டிங் செய்வது அணிக்குள் நெகிழ்வு தன்மையை கொண்டு வருகிறது. ஆனாலும் கூட இஷான் கிஷான் இருக்கும் அணியில் திலக் வர்மா இருக்கக் கூடாது என்பது கிடையாது. பத்திரிகையாளர் சந்திப்பில் எப்பொழுதும் அணியின் நெகிழ்வு தன்மை பற்றி பேசிக் கொண்டிருக்கும் ரோகித் சர்மாவுக்கு இது நெகிழ்வுத் தன்மையைத்தான் அளிக்கிறது!” என்று காட்டமாகக் கூறி இருக்கிறார்!

- Advertisement -