ஸ்ரேயாசுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்; பரிதாப பங்களாதேஷ்!

0
401
Indvsban

பங்களாதேஷ் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை விளையாடிவிட்டு தற்பொழுது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இன்று முதல் விடையாடி வருகிறது!

சாட்டாகிரம்மில் நடந்து வரும் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் டாசில் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி துவக்க வீரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் 22 ரன்னிலும் சுப்மன் கில் 20 ரன்னிலும் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து களம் கண்ட இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதற்கு அடுத்து வந்த ரிஷப் பண்ட் அதிரடியாக 45 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த சமயத்தில் இந்திய அணி 112 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் இருந்தது.

இதற்கு அடுத்து களம் கண்ட ஸ்ரேயாஸ் புஜாராவுடன் இணைந்து மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் அரை சதங்களை கடந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்க, ஆட்டம் 80 ஓவர்களை தாண்டியதால் புது பந்து வாங்கப்பட்டது. மேற்கொண்டு 85 ஆவது ஓவரில் அபோடேட் வேகப்பந்து வீச்சில் ஸ்ரேயாஸ் கிளீன் போல்ட் ஆனார். ஆனால் யாருமே எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு அப்பொழுது நடந்தது. ஸ்டெம்பின் மேலிருந்த பெயில்ஸ் கொஞ்சம் நகர மட்டுமே செய்தது ஆனால் கீழே விழவில்லை. இதனால் அவுட் ஆபத்திலிருந்து அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இதற்கு முன்பு இதே பந்துவீச்சாளர் இவருக்கு ஒரு எளிய கேட்சை விட்டிருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக அடுத்து தஜ்மல் ஓவரில் 90 ரன்கள் எடுத்திருந்த புஜாரா கிளீன் போல்ட் ஆனார். இவர்கள் இருவரும் சேர்ந்து 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் விதிகளின்படி, பந்து ஸ்டெம்பின் மேல் பட்டு பெயில்ஸ் கீழே விழுந்தால் மட்டுமே போல்ட் மற்றும் ரன் அவுட்டுக்கு அவுட் தரப்படும். இல்லையென்றால் தரப்படாது. இந்த விதியின்படி தப்பித்து தற்பொழுது ஸ்ரேயாஸ் விளையாடி வருகிறார்!

- Advertisement -