“லக்னோ அணி வெற்றி பெற வேண்டும் என்றால் கே.ஜி எஃப் க்கு பிடிக்காத விஷயத்தை செய்ய வேண்டும்”, என்ன அது? – இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து!

0
248

13-வது ஐபிஎல் தொடரின் 43வது போட்டி உத்திரபிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் வைத்து நடைபெற இருக்கிறது . இந்தப் போட்டியில் லக்னோ அணியும் பெங்களூர் அணியும் மோத இருக்கின்றன .

இந்தப் போட்டியில் பெரும் வெற்றியின் மூலம் லக்னோ அணி முதல் இரண்டு இடங்களுக்கு முன்னேறும் . பெங்களூர் அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டி மேலும் சுவாரசியமாகும் .

- Advertisement -

பெங்களூர் அணியை பொறுத்தவரை விராட் கோலி மேக்ஸ்வெல் மற்றும் பாப் டுப்லசிஸ் ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அழித்து வருகின்றனர் . அவர்களின் மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் மிகவும் மோசமான ஃபார்மில் இருக்கிறது.

மறுபுறம் லக்னோ அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது அந்த அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்கள் எல்லோரும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். இன்றைய போட்டியின் நிச்சயமாக பரபரப்பான ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இதுவரை லக்னோ மைதானங்களில் நடைபெற்ற ஆட்டங்கள் எல்லாம் சுழற் பந்துவீச்சிக்கு சாதகமாகவே இருந்திருக்கின்றன . ஆனால் இந்தப் போட்டிக்கு எவ்வாறான ஆடுகளம் அமைக்கப்படும் என்பதை பொறுத்து தான் வெற்றி தோல்வி என்பது தீர்மானிக்கப்படும் . இதுவரை கருப்பு மண்ணை கொண்டு தயாரிக்கப்பட்ட ஆடுகாலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன . இந்தப் போட்டி குறித்து தனது கருத்தை பகிர்ந்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா .

- Advertisement -

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” கருப்பு அல்லது சிவப்பு மண் ஆடுகளம் இன்றைய போட்டி எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கும் . கேஜிஎஃப் (கோஹ்லி, க்ளென் மற்றும் ஃபாஃப்) இது போன்ற ஆடுகளங்களை விரும்ப மாட்டார்கள் என்பது நாம் அறிந்ததே” என்று கூறியிருக்கிறார்.

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசி இருக்கும் அவர் ” பெங்களூர் அணியை பொறுத்தவரை கோஹ்லி, க்ளென் மற்றும் ஃபாஃப் இவர்களை தவிர வேறு எந்த வீரரும் குறிப்பிடும்படியான ரண்களை எடுக்கவில்லை . லோம்ரார் கடந்த போட்டியில் சில ரன்களை எடுத்தார் .ஷாபாஸ் அகமது சிறப்பாக செயல்படவில்லை இதனால் அந்த அணிக்கு பிரச்சனைகளே ஏராளமாக உள்ளன . எனவே சுழற்சிக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும்போது நிச்சயம் லக்னோ அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும்” என்று கூறினார்