“லக் மட்டும்தான் காரணம் இந்தியா அப்போ உலகக்கோப்பை ஜெயிக்க” – வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர்ச்சை கருத்து!

0
671

இந்திய அணி 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலக கோப்பையை வென்றது. 1975 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் முதல்முறையாக உலகக்கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மேற்கிந்திய தீவுகள் அணி தான் 75 மற்றும் 79 ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. ஆனால் அவர்களை வீழ்த்தி இந்தியா 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது .

கபில் தேவ் தலைமையிலான வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி உலக கோப்பையை வெற்றி பெற உதவியினர. குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் அந்தத் தொடர் முழுவதும் சிறப்பான பங்களிப்பை வழங்கி உலக கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பார்வையை தன் மீது திருப்பினார்

- Advertisement -

இந்தியா கிரிக்கெட்டில் மிகப்பெரிய எழுச்சியை பெறுவதற்கு 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றி முக்கிய பங்கு வகித்தது என்றால் அது மிகையாகாது . இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் வீரரும் முன்னாள் வேகபந்துவீச்சாளருமான ஆண்டி ராபர்ட்ஸ் இந்தியா அதிர்ஷ்டத்தால் தான் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது என சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருக்கிறார் .

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 183 ரன்கள் மட்டுமே எடுத்தது . மேற்கிந்திய தீவுகள் அணியில் விவியன் ரிச்சர்ட்ஸ், கிளைவ் லாயிட்,டெஸ்மெண்ட் ஹேயின்ஸ் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தும் அந்த அணி 140 ரன்கள் ஆல் அவுட் ஆனது . மேலும் மேற்கிந்திய தீவுகள் அணி முதல்முறையாக உலகக்கோப்பையில் தோல்வி அடைந்ததும் இந்திய அணியிடம்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது .

1975 ஆம் ஆண்டிலிருந்து உலகக் கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஒரு போட்டியில் கூட தோற்றதில்லை. இந்திய அணி இடம் தான் முதல் முறையாக 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் முதல் லீக் போட்டியில் தோல்வி அடைந்தது . அதன் பிறகு அதே உலகக்கோப்பை எண் இறுதிப் போட்டியிலும் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்தது .

- Advertisement -

மேலும் இறுதிப் போட்டியில் மதன்லால் சிறப்பாக பந்து வீசி 31 ரன்களை கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும் முடிந்தர் அமர்நாத் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்தியா உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தனர். . அப்படி இருந்தும் ஆண்டி ராபர்ட்ஸ் இந்திய அணியின் எந்த ஒரு வீரர்களும் இறுதிப் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஆடவில்லை என சர்ச்சையாக பேசியிருக்கிறார் .

இதுகுறித்து விரிவாக பேசியிருக்கும் அவர் ” விளையாட்டில் வெற்றி மற்றும் தோல்வி ஏற்படுவது சகஜம் தான் . எங்களை ஒரு தகுதியான அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெறவில்லை என்பதே என் கருத்து. நாங்கள் இந்திய அணியை சிறப்பாக விளையாடி 183 ரன்களில் அவுட் ஆகினோம் . ஆனால் இந்திய அணி வெற்றி பெற்றது முழுக்க அதிர்ஷ்டம் தான் . ஒரு அணி போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால் போட்டியின் முழு நேர அளவிலும் அவர்கள் ஆட்டத்திற்குள்ளே இருக்க வேண்டும் . அதில் நாங்கள் சிறிய தவறை செய்ததால் தோல்வி அடைந்தோமே தவிர இந்தியா எங்களை ஜெயிக்கவில்லை ” இன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார் ஆன்ட்டி ராபர்ட்ஸ்.