அட.. பலே பிளானா இருக்கே; காயமடைந்த வீரருக்கு பதில், கடைசி நேரத்தில் அதிரடி மும்பை வீரரை அணியில் எடுத்து ட்விஸ்ட் கொடுத்த லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி!

0
757

பயிற்சியின் போது காயமடைந்த இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனட்கட் பதிலாக இளம் அதிரடி வீரரை உள்ளே எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரில் மிகசிறப்பாக செயல்பட்டு வருகிறது. 13 போட்டிகளில் 15 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. கடைசி லீக் போட்டியை கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடுகிறது. இதில் வெற்றி பெற்றால் எந்தவித சிக்கலும் இன்றி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் நிலையிலும் இருக்கிறது.

- Advertisement -

லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தசைப்பிடிப்பு மற்றும் காயம் ஏற்பட்டு ஐபிஎல் தொடரிலிருந்து பாதியிலேயே விலகினார். மீதம் இருக்கும் போட்டிகளுக்கு க்ருனால் பாண்டியா கேப்டன் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். கடைசியாக நடந்த லீக் போட்டியில் பலமிக்க மும்பை அணியை வீழ்த்தி கிட்டத்தட்ட பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்து கொடுத்திருக்கிறார் க்ருனால் பாண்டியா.

இப்படி சிறப்பான நிலையில் இருக்கும் லக்னோ அணியில் இடம்பெற்று வந்த இடதுகை வேகபந்து வீச்சாளர் ஜெயதேவ் உனட்கத், பயிற்சி செய்து கொண்டிருந்தபோது தசைப்பிடிப்பு மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.

ஐபிஎல் லீக் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டிவிட்டது. அடுத்ததாக பிளே-ஆப் சுற்று விரைவில் வரவிருக்கிறது. இந்த நேரத்தில் உனட்கத்-க்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்திருக்கிறது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி நிர்வாகம்.

- Advertisement -

மும்பையைச் சேர்ந்த இளம் வீரர் சுயான்ஸ் ஷேடே என்பவரை மாற்றுவீரராக அறிவித்திருக்கிறதும் இவர் உள்ளூர் டோர்னமென்டில் 127 பந்துகளில் முச்சதம் அடித்து இந்தியா முழுவதும் பிரபலமாக பேசப்பட்டவர் ஆவார். மும்பை அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த வருடம் நடைபெற்ற முடிந்த உள்ளூர் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக இவரை மாற்று வீரராக அணிக்குள் எடுத்திருக்கிறது லக்னோ.

அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பதால், பார்மில் இல்லாத தீபக் ஹூடாவிற்கு பதிலாக பிளேயிங் லெவனிலும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. இது ஒரு நல்ல தேர்வு என்றும் கருத்துக்கள் நிலவுகிறது.