இது நடக்கும்னு எனக்கு முன்னவே தெரியும்.. சிவம் துபேவுக்காக யாரையும் அவுட்டாக சொல்ல முடியாது – ருதுராஜ் பேட்டி

0
8788
Ruturaj

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், லக்னோ அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. சொந்த மைதானத்தில் 200 ரன்கள் மேல் அடித்தும் சிஎஸ்கே அணி தோற்றதற்கான காரணங்கள் குறித்து கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு கேப்டன் ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்களும், சிவம் துபே 27 பந்தில் 66 ரன்களும் எடுத்தார்கள். இவர்களின் சிறப்பான பங்களிப்பால் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 210 ரன்கள் குவித்தது.

- Advertisement -

லக்னோ அணிக்கு பேட்டிங்கில் பூரன் மட்டுமே 15 பந்தில் அதிரடியாக 34 ரன்கள் எடுத்தார். மற்ற யாரும் சரியான ரன் பங்களிப்பு செய்யவில்லை. ஆனால் இந்த போட்டியில் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் தனி ஒரு வீரராக இறுதிவரை ஆட்டம் இழக்காமல் நின்று 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து லக்னோ அணியை வெற்றி பெற வைத்தார்.

இன்றைய போட்டியில் இரண்டாவது பந்து வீசும் பொழுது பனிப்பொழிவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இரண்டாவது பகுதியில் லக்னோ பேட்டிங் செய்வது எளிதாக அமைந்தது. இன்றைய போட்டியில் டாஸ் தோற்றது போட்டியை தோற்றத்தில் முக்கிய பங்கு வகித்தது.

தோல்விக்கு பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறும்பொழுது “இது விழுங்குவதற்கு கடினமான ஒரு மாத்திரை. ஆனால் நல்ல கிரிக்கெட் போட்டி. நாங்கள் 14 ஓவர்கள் வரையில் போட்டியை கையில் வைத்திருந்தோம். பிறகு ஸ்டோய்னிஸ் சிறப்பான ஒரு இன்னிங்ஸ் விளையாடினார். இன்று பனி ஆட்டத்தில் ஒரு பெரிய பங்கை கொண்டிருந்தது. இது போட்டியிலிருந்து எங்கள் ஸ்பின்னர்களை வெளியே எடுத்தது. பனி இல்லாமல் இருந்திருந்தால் நாங்கள் ஆட்டத்தை ஆழமாக எடுத்து இருக்க முடியும். இதெல்லாம் ஆட்டத்தின் ஒரு பகுதி, நம் கையில் இல்லாத விஷயத்தை கட்டுப்படுத்த முடியாது.

- Advertisement -

இதையும் படிங்க : 63 பந்து 124 ரன்.. லக்னோ ஸ்டோய்னிஸ் புது வரலாறு.. சிஎஸ்கே புள்ளி பட்டியலில் பின்னடைவு

பவர் பிளேவில் இரண்டு விக்கெட் இழந்த காரணத்தினால் ஜடேஜா பேட்டிங் செய்ய வருகிறார். பவர் பிளேவில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்தால், பவர் பிளே முடிந்து சிவம் துபே நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வருவார் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ஆனால் அவருக்காக விளையாடும் யாரையும் அவுட் ஆக சொல்லி கட்டாயப்படுத்த முடியாது. உண்மையை சொல்வது என்றால் நாங்கள் அடித்த ரன்கள் போதாது என்று நினைத்தேன். ஏனென்றால் நாங்கள் இங்கு பயிற்சி செய்த பொழுது இரவில் பெரிய அளவில் பனி வந்தது. ஆனாலும் லக்னோ அணி சிறப்பாக பேட்டிங் செய்தது” என்று கூறியிருக்கிறார்.