94/7 சரிந்த லக்னோ அணி.. பதோனி அர்ஷத் கான் ஜோடி ஐபிஎல் வரலாற்றில் 2வது அட்டகாசமான சாதனை

0
77
IPL2024

நடப்பு 17 வது ஐபிஎல் சீசனில் இன்று லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி லக்னோ ஏகனா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்து கொண்டது.

லக்னோ அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் குயின்டன் டி காக் 13 பந்தில் 19 ரன்கள், கேப்டன் கேஎல்.ராகுல் 22 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து தேவ்தத் படிக்கல் 3 (6), மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 8 (10) ஆகியோர் சொற்ப ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அதிரடி ஆட்டக்காரரான நிக்கோலஸ் பூரன் குல்தீப் யாதவின் பந்துவீச்சில் கோல்டன் டக் அடித்து வெளியேறி அந்த அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். மேலும் தீபக் ஹூடா 10 (13) ரன்களில் வெளியேற, லக்னோ அணி 94 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து, பெரிய நெருக்கடியில் சிக்கியது.

இந்த நிலையில் இளம் வீரரான ஆயுஸ் பதோனியுடன், இன்றைய போட்டியில் லக்னோ அணிக்காக விளையாடும் வாய்ப்பை முதல் முறையாகப் பெற்ற இடதுகை வேகபந்துவீச்சாளர் அர்ஷத் கான் இணைந்தார். இந்த ஜோடி கொஞ்சம் கொஞ்சமாக விளையாடி அணியை 120 ரன்களை முதலில் தாண்ட வைத்தது.

இதற்கு அடுத்து இந்த ஜோடியில் அதிரடி காட்டிய ஆயுஷ் பதோனி 31 பந்தில் அரை சதம் எடுத்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் ஆட்டம் இழக்காமல் 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 55 ரன்கள், இவருடன் இணைந்து விளையாடிய அர்ஷத் கான் 16 பந்துகளில் 2 பவுண்டரிகள் உடன் 20 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ் நான்கு ஓவர்களுக்கு 20 ரன்கள் மட்டுமே தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதையும் படிங்க : நியாயமே இல்ல ஏத்துக்கவே முடியாது.. களத்தில் அம்பயருடன் ரிஷப் பண்ட் வாக்குவாதம்.. களத்தில் என்ன நடந்தது?

லக்னோ அணியின் எட்டாவது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி ஆட்டம் இழக்காமல் மொத்தம் 42 பந்துகளில் 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் எட்டாவது விக்கெட்டுக்கு கீழே எடுக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ரன் என்ற வகையில் சாதனையாக அமைந்திருக்கிறது. முதல் இடத்தில் 88 ரன்கள் மும்பைக்கு எதிராக குவித்த ரஷித் கான் மற்றும் அல்சாரி ஜோசப் குஜராத் ஜோடி இருக்கிறது. மேலும் இதுவே எட்டாவது விக்கெட்டுக்கு ஐபிஎல் தொடரில் அமைக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.