இன்று லக்னோ ஏகனா மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்பொழுது ஐபிஎல் தொடரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் அம்பயரின் முடிவை ஏற்காமல் ரிஷப் பண்ட் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
டெல்லி கேப்பிடல் அணியில் முகேஷ் குமார், குல்தீப் யாதவ், ஷாய் ஹோப் ஆகியோர் திரும்பி வந்திருக்கிறார்கள். மேலும் மெக்கர்க் டெல்லி கேப்பிடல் பணிக்காக ஐபிஎல் தொடரில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறார். லக்னோ அடியில் காயமடைந்த மயங்க் யாதவ் இடத்தில் அர்ஷத் கான் இடம் பெற்றிருக்கிறார்.
லக்னோ அணிக்கு துவக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் 13 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் உடன் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து தேவ் தேத்தத் படிக்கல் விளையாட வந்தார். அவர் வழக்கம்போல் இந்த போட்டியிலும் தடுமாறியே விளையாடினார்.
இந்த நிலையில் அவருக்கு லெக் சைடு வீசப்பட்ட ஒரு பந்துக்கு அம்பயர் வைடு கொடுத்தார். ஆனால் பேட்ஸ்மேன் மேல் பட்டு பந்து வந்த சத்தம் கேட்டதாக கூறி ரிஷப் பண்ட் மூன்றாவது நடுவரிடம் ரிவ்யூ எடுக்க சென்றார். மூன்றாவது நடுவர் ரிவ்யூ பார்த்துவிட்டு பந்து பேட்ஸ்மேன் மேல் படவில்லை என்று கூறிவிட்டார்.
ரிஷப் பண்ட் களத்தில் இருந்த நடுவரிடம் பந்து பட்டதா இல்லையா என்கின்ற ஸ்னிக்கோ மீட்டரை காட்டாமலே, பந்து படவில்லை என்று வெறுமனே சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்வது? எங்களுக்கு திருப்பி அதைக் காட்டுங்கள் என்று அம்பயரிடம் நீண்ட நேரம் விவாதம் செய்தார். ஆனால் அம்பயர் கடைசிவரையில் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் ரிஷப் பண்ட் இந்த விஷயத்தில் முதன்முறையாக ஆதாரம் கேட்டு பேசி இருப்பதை பலரும் வரவேற்று இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : MI vs CSK: வியக்க வைக்கும் வான்கடே புள்ளி விவரங்கள்.. சிஎஸ்கே 16 வருட வரலாற்றை மாற்றுமா? – முழு தகவல்கள்
மேலும் நேற்று ஆர்சிபி அணிக்கு எதிராக மும்பை விளையாடிய போட்டியில், மும்பை அணிக்கு சாதகமாக நிறைய முடிவுகள் அம்பயரால் எடுக்கப்பட்டதாக ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அம்பையர் முடிவை எதிர்த்து ரிஷப் பண்ட் பேசி இருப்பதால் அவருக்கு வரவேற்பு வந்து கொண்டிருக்கிறது.