LPL 2023.. ஹசரங்கா அணி சாம்பியன்.. அசத்தலான பரிசுத்தொகை மற்றும் விருதுகள் விபரம் இதோ!

0
823

கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதியை துவங்கிய லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரானது நேற்றைய இறுதி போட்டியுடன் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் ஹசரங்கா தலைமையிலான பீ லவ் கண்டி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஐந்து அணிகள் கலந்து கொண்ட லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி இலங்கையில் வைத்து துவங்கியது . இந்தத் தொடரின் முதல் போட்டியில் கடந்த வருட சாம்பியனான ஜாப்னா கிங்ஸ் அணி கொழும்பு ஸ்டிக்கர்ஸ் அணியை வீழ்த்தியது . லீக் போட்டிகளின் முடிவில் தம்புலா அவுரா, காலே டைட்டன்ஸ், ஜாப்னா கிங்ஸ் மற்றும் பீ லவ் கண்டி அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

- Advertisement -

பிளே ஆப் சுற்றின் முடிவில் தம்புல்லா அவுரா அணி மற்றும் பீ லவ் கண்டி அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய தம்புல்லா அவுரா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய பீ லவ் கண்டி அணியினர் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்று 2023 ஆம் ஆண்டிற்கான சாம்பியன் பட்டத்தை வென்றது .

மேலும் இந்த தொடரின் பரிசுத்தொகை மற்றும் தொடரில் விருது பெற்ற வீரர்கள் யார் அவர்களுக்கு எவ்வளவு பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டன என்பது குறித்து பார்ப்போம்.

சேஃப் ஹேண்ட்ஸ் அவார்ட் :
இந்தத் தொடரில் அதிகமான கேட்ச் பிடித்த வீரர்களுக்கு சேஃப் ஹேண்ட்ஸ் விருது என்ற ஒரு ஆனது வழங்கப்பட்டது. இந்த விருதினை தென்னாப்பிரிக்காவை சேர்ந்த டேவிட் மில்லர் அதிக கேட்ச் பிடித்து தட்டிச் சென்றார். இவருக்கு பரிசுத் தொகையாக 1000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டது. இதன் இந்திய மதிப்பு 83 ஆயிரம் ரூபாயாகும்.

- Advertisement -

மேக்ஸிமம் சிக்ஸர்ஸ் அவார்ட்:
ஐபிஎல் மற்றும் பிற t20 லீக் தொடர்களில் வழங்குவது போன்றே அதிகமான சிக்ஸர்களை அடித்த வீரருக்கு மேக்ஸிமம் சிக்ஸர்ஸ் அவார்ட் லங்கா பிரீமியர் லீக்கில் வழங்கப்பட்டது. இந்த விருதினை பிலவ் கண்டி அணியின் கேப்டன் வணிந்து ஹசரங்கா 14 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் தட்டி சென்றார். இவருக்கு பரிசுத் தொகையாக 1000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டது.

சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான விருது:
லங்கா பிரீமியர் லீக் தொடரில் சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான விருதை தம்புல்லா அவுரா அணியை சேர்ந்த 24 வயது வீரரான லசீத் குரூஸ்புள்ளே தட்டி சென்றார். எட்டு போட்டிகளில் விளையாடிய இவர் 232 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

அதிக விக்கெட் களை வீழ்த்திய வீரருக்கான விருது:
லங்கா பிரீமியர் லீக் தொடரில் அதிக விக்கெட் கை வீழ்த்தியதற்கான விருதை பீ லவ் கண்டி அணியின் கேப்டனான வணிந்து ஹசரங்கா தட்டிச் சென்றார். 10 போட்டிகளில் விளையாடிய இவர் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இவருக்கு இந்த விருதுடன் ஆயிரத்து 500 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டது இதன் இந்திய மதிப்பு 1,24,000 ரூபாய் ஆகும் .

அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான விருது:
இந்த விரதையும் பி லவ் கண்டி அணியின் கேப்டன் மற்றும் இலங்கை அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான வணிந்து ஹசரங்கா தட்டிச் சென்றார். பத்து போட்டிகளில் ஆடிய இவர் 279 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதிற்காகவும் அவருக்கு 1500 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டது.

தொடர் நாயகன் விருது:
லங்கா பிரீமியர் லீக் தொடரின் நாயகன் வருதையும் வணிந்து ஹசரங்காவே தட்டிச் சென்றார். இந்தத் தொடரில் அவர் 279 ரன்கள் எடுத்திருந்ததோடு 19 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக அவருக்கு தொடர் நாயகன் வருவதற்கான கோப்பையும் 5000 அமெரிக்க டாலர்களும் சன்மானமாக வழங்கப்பட்டன. இதன் இந்திய மதிப்பு 4,15,000 ரூபாய் ஆகும்.

வெற்றி பெற்ற மற்றும் தோல்வி அடைந்த அணிக்கான பரிசுத்தொகை விபரங்கள்:
லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டியில் தோல்வி அடைந்த தம்புல்லா அவ்ரா அணியினருக்கு ரன்னர் பரிசுத்தொகையாக ஐம்பதாயிரம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டன. இதன் இந்திய மதிப்பு 41,59,000 ஆகும். மேலும் இந்த பிரிமியர் லீக் போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்ற பிளவு கண்டிக்கி பரிசுத் தொகையாக 1,00,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டது. இதன் இந்திய மதிப்பு 83,18,000 ரூபாய் ஆகும்.