லார்டுனா சும்மாவா .. ஸ்டார்க்கின் சாதனையை பதம் பாத்த ஷர்துல் தாகூர் .. பும்ரா பக்கத்தில கூட இல்ல!

0
265

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி தொடர் நேற்றுடன் முடிவடைந்தது . நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 351 ரன்களை குவித்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது .

- Advertisement -

இந்திய அணிக்காக சிறப்பாக பந்து வீசிய சர்துல் தாகூர் 37 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் 2019 ஆம் வருட உலகக் கோப்பைக்கு பிறகு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் , 32 போட்டிகளில் விளையாடி இருக்கும் தாக்கூர் 48 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் .

இந்திய அணியின் இடது கை சுழற் பந்து வீச்சாளரான குல் தீப் யாதவ் அதே 32 போட்டிகளில் 46 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்தார் . அதனை தற்போது சார்துல் தாக்கூர் முறியடித்து இருக்கிறார் . மேலும் இந்த காலகட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் இடதுகை முன்னணி வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்கை விட அதிக விக்கெட் களை வீழ்த்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

கடந்த நான்கு வருடங்களில் ஆஸ்திரேலியா அணியின் ஆடம் ஜாம்பா 31 போட்டிகளில் 66 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் . இவரைத் தொடர்ந்து சர்துல் தாகூர் 32 போட்டிகளில் 48 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக முகமது சிராஜ் 22 போட்டியில் விளையாடின 41 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் .

- Advertisement -

நேற்றைய போட்டிக்கு பின் பேட்டி அளித்த சர்துல் தாகூர் தான் எப்போதும் தன்னுடைய இடத்திற்காக விளையாடியதில்லை என்றும் அணியின் வெற்றிக்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரராகவே விளையாடி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்திய அணி தன்னை உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யுமா என்று தெரியாது. இப்படி அணி தேர்வு செய்யவில்லை என்றால் அது என்னுடைய தவறாக இருக்காது எனவும் கூறி இருக்கிறார் .

2020 மற்றும் 21 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிரிஸ்பெயின் டெஸ்ட் வெற்றியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இவரது பங்கு முக்கியமானது . அந்தப் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு முதல் இன்னிங்ஸில் 67 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டு ஓவல் டெஸ்ட் வெற்றியிலும் இரண்டு அரை சதங்கள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .