“கோலி சச்சின் சாதனையை பார்த்தா.. இந்தியாவுக்கு உலக கோப்பை கிடைக்காது!” – நாசர் ஹுசைன் அதிரடியான எச்சரிக்கை!

0
608
Virat

நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஒட்டுமொத்தமாக வெற்றி தோல்வி பக்கம் ரசிகர்கள் சென்று கொண்டிருந்தாலும், அதே அளவிற்கு இன்னொரு பக்கம் விராட் கோலி நடப்பு உலகக் கோப்பை தொடரில் சச்சின் ஒரு நாள் கிரிக்கெட் சத சாதனையை முறியடிப்பாரா? என்பதும் இருக்கிறது.

சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்கள் எடுத்திருக்க விராட் கோலி தற்பொழுது 48 சதங்கள் எடுத்திருக்கிறார். அவர் நேற்று மும்பையில் வைத்து சச்சின் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஒரு புத்திசாலித்தனமான மெதுவான பந்தில் 88 ரன்களுக்கு ஆட்டம் இழந்துவிட்டார்.

- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் அவருக்கு ஆஸ்திரேலியா நியூசிலாந்து இங்கிலாந்து என பெரிய அணிகளுக்கு எதிராக சதம் அடிக்கும் வாய்ப்பு கைக்கு பக்கத்தில் வந்தது. ஆனால் அவரால் அந்த பெரிய ரன்களை சதமாக மாற்ற முடியாமல் போய்விட்டது. மாற்றி இருப்பார் என்றால் இந்நேரத்திற்கு அவர் சச்சினின் சத உலகச் சாதனையை முறியடித்து இருப்பார்.

இதேபோல் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் நூறாவது சதத்தை எடுப்பதற்கு மிகவும் அழுத்தத்தை உணர்ந்தார். அவருக்கு அதற்கு வாய்ப்புகள் தள்ளிக் கொண்டே போனது. அப்பொழுது அவரைச் சுற்றி நூறாவது சதம் என்கின்ற ஒரு விஷயத்தை வைத்து பெரிய அழுத்தம் கட்டமைக்கப்பட்டது.

சச்சினுக்கு உலகக் கோப்பை தொடருக்கு வெளியில் இவ்வாறு அழுத்தம் உருவாக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது விராட் கோலிக்கு உலக கோப்பையில் வைத்து இவ்வாறான அழுத்தம் உருவாக்கப்பட்டு கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து எச்சரிக்கை செய்த நாசர் ஹுசைன் கூறும்பொழுது “உலகக் கோப்பையை வெல்வது குறித்து நாம் எது பேசினாலும் அது மிக முக்கியமானது. விராட் கோலி 49 சதங்கள், 50 சதங்கள், 100 சதங்கள் என்று நிச்சயம் எடுக்கத்தான் போகிறார். அவர் அந்த அளவிற்கு திறமையான பேட்ஸ்மேன்.

ஆனால் இங்கு மிக முக்கியமான விஷயம் என்பது இந்தியா உலகக் கோப்பையை வெல்வது பற்றியதுதான். ஆனால் விராட் கோலியின் 49வது சதம் பற்றி பெரியதாக இந்தியாவில் பில்டப் செய்யப்படக்கூடாது.

சச்சின் இதைப்பற்றி கூறியது எனக்கு நினைவிருக்கிறது. அவர் 99 ஆவது சதத்தில் இருந்த பொழுது அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையின் ஊழியர் இன்று நீங்கள் நூறாவது சதம் அடித்து விடுவீர்களா என்று கேட்கும் அளவுக்கு அழுத்தம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அது 99 இல் இருந்து 100வது சதம் வரைக்கும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னைப் பொறுத்தவரை விராட் கோலி இந்த மாதிரியான சத்தங்களில் இருந்து தன்னை முடிந்த வரையில் மறைத்துக் கொள்வார் என்று நான் நம்புகிறேன். இந்தியா உலகக் கோப்பையை வெல்வது முக்கியமானது!” என்று கூறியிருக்கிறார்!