கிரிக்கெட், உலகத் தரம் வாய்ந்த ஓர் விளையாட்டு. அமெரிக்கா, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகளும் கிரிக்கெட்டில் முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கிறார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் இர்பான் பதான் – யூசுஃப் பதான், ஆல்பி – மார்னே மார்க்கல் போன்ற பல உடன்பிறப்புகள் ஒன்றாக விளையாடி உள்ளனர். அவர்களில் ஒரு சிலர் பார்ப்பதற்கு ஒரே மாதிரி தோற்றத்தில் இருப்பர் என்றால் அதில் ஆச்சரியம் இல்லை.
ஆனால் வேறு தாயின் வயிற்றில் பிறந்த இரு கிரிக்கெட் வீரர்களும் பார்பதற்கு ஒரே தோற்றத்தில் உள்ளனர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா ? அவர்களைப் பற்றி பின்வருமாறு பார்ப்போம்.
1. தவால் குல்கர்னி – அஜிங்கிய ரஹானே
I agree 😆😅😂😂 @dhawal_kulkarni @ajinkyarahane88 pic.twitter.com/WZfXLKOAJ1
— Rohit Sharma (@ImRo45) June 17, 2016
குல்கர்னி மற்றும் ரஹானே இருவரும் மும்பை நகரைச் சேர்ந்தவர்கள். ராபின் உத்தப்பாவும் கிட்டத்தட்ட இவர்களைப் போலவே இருப்பார் ஆனால் குல்கர்னி – ரஹானே இருவரின் முகம் தான் அதிகமாக ஒத்துப்போகும்.
இவர்கள் இருவரும் ஐ.பி.எலில் ராஜஸ்தான் அணிக்காக ஒன்றாக விளையாடி உள்ளனர். ரஞ்சித் கோப்பையில் மும்பை அனிக்காகவும் ஒன்றாக ஆடி உள்ளனர். குல்கர்னி மும்பை அணியின் முக்கிய பந்துவீச்சாளர். ரஹானே இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக உள்ளார்.
2. விராட் கோஹ்லி – அஹ்மத் ஷெசாத்
இந்தியக் கேப்டன் விராட் கோஹ்லியும் பாகிஸ்தான் தொடக்க வீரர் அஹமத் ஷெசாத்தும் ஒரே மாதிரி இருப்பதாக இணையத்தில் செய்திகள் வந்தன. இவர்கள் இருவரையும் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் தான் ஒப்பிட முடியும் என்று ரசிகர்கள் நகையாடினர்.
ஏனென்றால் ஒரு முறை இருவரின் பேட்டிங் திறனும் ஒப்பிடப்பட்டது. ஷெசாத்தை விட விராட் கோஹ்லி பல மடங்கு உயர்ந்த பேட்ஸ்மேன் என்று நம் அனைவருக்கும் தெரியும்.
3. ஏபி டிவில்லியர்ஸ் – டிராவிஸ் ஹெட்

ஐ.பி.எல் 10வது சீசனில் பவுண்டரி எல்லையின் வெளியில் நின்று கொண்டிருந்த டிராவிஸ் ஹெட்டும் மைதானத்திற்குள் இருந்த டிவில்லியர்ஸும் ஒரே மாதிரி இருப்பதைக் கண்டு அனைவரும் வியந்தனர். இவர்கள் இருவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினர்.
கிரிக்கெட் ஆட்டத்திலும் அவர்களிடையே ஒற்றுமை உண்டு. இருவரும் மிடில் ஆர்டர் – விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள். அதுமட்டுமல்லாமல், இருவரும் ஒரு சில ஓவர்கள் பந்து வீசும் திறனும் கொண்டனர். வேற்றுமை என்றால் டிராவிஸ் ஹெட் இடது கை பேட்ஸ்மேன் மற்றும் டிவில்லியர்ஸ் வலது கை பேட்ஸ்மேன்.
4. பிரசித் கிருஷ்ணா – ஷான் மசூத்
— Behind Cricket (@behindCric8) July 16, 2021
பிரசித் கிருஷ்ணா மற்றும் மசூத்தின் முகத்தையும் உற்றுப் பார்த்தால் எந்த ஒரு வித்தியாசமும் தெரியாது. அந்த அளவிற்கு அவர்கள் ஒத்துப்போவார்கள். ஷான் மசூத், சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்குகிறார்.
பிரசித் கிருஷ்ணா தற்போது தான் சர்வதேச அளவில் வளர்ந்து வருகிறார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இந்த வேகப் பந்துவீச்சாளர் மீது விராட் கோஹ்லி அதிக நம்பிக்கை வைத்துள்ளார். தொடர்ந்து அவர் இந்திய அணியில் ஆட இன்னும் அதிக பயிற்சி தேவை.
5. மார்ட்டின் கப்தில் – ஹென்ரிச் கிளாசன்
— Behind Cricket (@behindCric8) July 16, 2021
நியூசிலாந்து தொடக்க வீரர் மார்ட்டின் கப்திலும் தென்னாபிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசனும் தோட்றத்தில் ஒரே மாதிரியாக உள்ளனர். மார்ட்டின், நியூசிலாந்து அணியின் ஓர் முக்கிய வீரர். ஆனால் ஹென்ரிச் கிளாசன் தற்போது தான் மெதுவாக சர்வதேச கிரிக்கெட்டில் பிரபலமாகி வருகிறார்.
தென்னாபிரிக்க அணியை வழிநடத்தும் வாய்ப்பும் கிளாசனுக்கு கிடைத்தது. இருவருக்கும் மற்றுமொரு ஒற்றுமை உண்டு. கப்தில் மற்றும் கிளாசன் இருவரும் டி20களில் அதிரடி ஆட்டக்காரர்கள்.