“சொன்னா கேளுங்க.. அஷ்வின் ஜடேஜா சேர்ந்து விளையாடறது வேலைக்கு ஆகாது!” – எச்சரிக்கும் இந்திய முன்னாள் வீரர்!

0
1819
Jadeja

இந்திய அணி நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆறு வருடங்களுக்குப் பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து விளையாடினார்கள்.

நடைபெற இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் எந்த ஒரு வலதுகை சுழற் பந்துவீச்சாளரும் இல்லை என்பது ஒரு குறையாக இருந்து வந்தது.

- Advertisement -

இந்த நிலையில் அக்சர் படேல் காயம் அடைய, அவரது இடத்துக்கு தற்பொழுது ஆஸ்திரேலியா தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுத்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

நேற்று ரவிச்சந்திரன் அஸ்வின் முழுமையாக பார்த்து ஓவர்கள் பந்து வீசி 47 ரன்கள் தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். ஆனால் அவரது பந்துவீச்சு முதல் ஆறு ஓவர்களில் 36 ரன்கள் என்றுதான் இருந்தது. சிறப்பாக அமையவில்லை.

அதே நேரத்தில் ரவீந்திர ஜடேஜா 10 ஓவர்கள் பந்துவீசி 51 ரன்கள் தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். அவரது பந்துவீச்சு ஆரம்பத்தில் மிகவும் சிக்கனமாக இருந்தது. ஆனால் அவர் இறுதிக்கட்ட ஓவர்களை வீசியதால் ரன்கள் கொஞ்சம் கூடுதலாக வந்து விட்டது.

- Advertisement -

தற்பொழுது இவர்கள் இருவரும் ஒரே அணியில் விளையாடுவது குறித்து பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது
“இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் சிக்கனமாக இருந்தார்கள். ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக தொடங்கவில்லை. சில பவுண்டரிகள் அடிக்கப்பட்டார். சில காலமாக அவர் ஒருநாள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்ததால் கடினமாக இருந்திருக்கும். பின்னர் அவர் வலுவாகத் திரும்பி ஒரு விக்கெட் கைப்பற்றினார். ஜடேஜாவும் சிக்கனமாக இருந்தார். ஆடுகளம் தட்டையாக இருக்கும் பொழுது இது நல்ல செயல்பாடு.

என்னுடைய ஒரே கவலை என்னவென்றால் இருவரும் சேர்ந்து பந்து வீசுவது வேலை செய்யவில்லை என்பதுதான். இந்த ஜோடியின் பந்துவீச்சு வேலை செய்திருந்தால் இந்திய அணி நிர்வாகம் வேறு பக்கம் கவனத்தை திருப்பி இருக்காது.

மிடில் ஓவர்களில் விக்கெட்டுகள் தேவை என்கின்ற காரணத்தினால் தான் இந்திய அணி நிர்வாகம் இந்த ஜோடியை விட்டு சென்றது. ஆனால் மீண்டும் அந்தப் பாதையை விட்டுவிட்டு நீங்கள் வேறு பக்கம் நகர்ந்து போகிறீர்கள். உங்களுடைய மாற்றத்தின் நோக்கம் தோல்வி அடைந்திருக்கிறது. உங்களுக்கு மிடில் ஓவரில் விக்கெட்டுகள் தேவை. ஆஸ்திரேலியா பேட்டிங்கில் சாதாரணமாக இருந்தது. ஆனால் நடுத்தர ஓவர்களில் விக்கெட்டுகள் தேவை!” என்று கூறி இருக்கிறார்!