கேட்டுக்கோங்க.. இந்த உலகக் கோப்பை பைனலில் இவங்க ரெண்டு பேரு தான் ஆடுவாங்க.. லெஜன்ட் ஹஷிம் ஆம்லா கணிப்பு.!

0
50663

நடப்பு உலக கோப்பை தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைய இருக்கிறது. 45 லீக் போட்டிகளும் இரண்டு அரை இறுதி போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகளைக் கொண்ட 13 வது உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்று இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையே பெங்களூரில் நடைபெற இருக்கும் போட்டியுடன் லீக் சுற்று போட்டிகள் முடிவடைகின்றன .

இதனைத் தொடர்ந்து நவம்பர் 15 ஆம் தேதி முதல் அரை இறுதி போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற இருக்கிறது. மேலும் நவம்பர் 16ஆம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரின் பிரம்மாண்டமான இறுதிப் போட்டி 19ஆம் தேதி அகமதாபாத்தில் வைத்து நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த உலகக் கோப்பையின் தொடக்கம் முதலே இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி விளையாடி வருகிறது. மேலும் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி மட்டும்தான் இதுவரை எந்த போட்டிகளிலும் தோல்வி அடையவில்லை இதுவரை 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 14 புள்ளிகளுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கின்றன. நியூசிலாந்து 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது.

உலகக்கோப்பை இறுதி கட்டத்தை எட்டி இருப்பதால் எந்த இரண்டு அணிகள் இறுதிப் போட்டிகளில் விளையாடும் என்பது தொடர்பான கணிப்புகளை பல்வேறு கிரிக்கெட் நிபுணர்களும் முன்னாள் வீரர்களும் வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் மற்றும் பிராட் ஹாக் உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் துவக்க வீரரும் டெஸ்ட் மட்டும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை புரிந்த ஹாசிம் ஆம்லா இந்த வருட உலகக்கோப்பை என் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கும் இரண்டு அணிகளை தேர்வு செய்து இருக்கிறார்.

இது தொடர்பாக தென்னாப்பிரிக்காவின் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் அவர் 2023 ஆம் வருட உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் பாவமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை நவம்பர் 19ஆம் தேதி எதிர்கொள்ளும் என தனது கணிப்பை தெரிவித்திருக்கிறார். இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் வெளிப்படுத்தி வருகிறது எனவும் இதன் அடிப்படையில் தனது கணிப்பை தெரிவித்திருப்பதாகவும் தனது பேட்டியின் போது குறிப்பிட்டு இருக்கிறார் ஹாஷிம் ஆம்லா.

- Advertisement -

தென்னாப்பிரிக்க அணி இதுவரை விளையாடி இருக்கும் 9 உலகக் கோப்பைகளில் நான்கு முறை அரையிறுதி போட்டிகளுக்கு தகுதி பெற்று இருக்கிறது. இரண்டு முறை கால் இறுதிப் போட்டிகளில் தோல்வியை சந்தித்து இருக்கிறது அந்த அணி. இரண்டு உலக கோப்பை தொடர்களில் முதல் சுற்றுரோடு வெளியேறி இருக்கிறது. தென்னாப்பிரிக்கா அணி அர இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் அந்த அணி தங்களது உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்..

தென் ஆப்பிரிக்க அணிக்காக 124 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கும் ஆம்லா 9282 ரன்கள் சேர்த்திருக்கிறார். இதில் 41 அரை சதங்களும் 28 சதங்களும் அடங்கும். மேலும் 181 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் 8113 ரன்கள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 44 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 1277 ரன்கள் சேர்த்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரிலும் இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி உள்ளார்.