ரஜத் பட்டிதார் சர்பராஸ் கான்?.. யாருக்கு வாய்ப்பு தர வேண்டும்? – ஆகாஷ் சோப்ரா புதிய கோணத்தில் பதில்

0
78
Rajat

இந்திய அணி எதிர்பாராத விதமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வி அடைந்தது இல்லாமல், முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ரவிந்திர ஜடேஜா மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் காயத்தால் மொத்த தொடரில் இருந்தும் வெளியேறி இருக்கிறார்கள்.

மேலும் விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு கிடைக்க மாட்டார் என்பதால் தற்பொழுது இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மிகவும் வலிமையற்றதாக தெரிகிறது.

- Advertisement -

மேலும் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் பேட்டிங்கில் தொழில்நுட்ப ரீதியாகவும் மனநிலை ரீதியாகவும் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள். இந்திய அணிக்கு இது ஒரு தனி பிரச்சனையாக இருக்கிறது. மேலும் முக்கியம் மூன்று வீரர்கள் இல்லாதது என சேர்த்து, இந்திய அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் யூனிட்டும் மிக பலவீனமாக மாறிவிட்டது.

இந்த நிலையில் தற்போது பேட்டிங் யூனிட்டில் புதிதாக ரஜத் பட்டிதார் மற்றும் சர்பராஸ் கான் இருவரும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் இருவரில் பிளேயிங் லெவனில் விளையாடுவதற்கு யாருக்கு வாய்ப்பு கொடுத்தால் சரியாக இருக்கும்? என்கின்ற விவாதங்கள் வெளியே சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “கேஎல்.ராகுல் கேரியரில் காயம் மற்றும் நோய் பெரிய விஷயமாக இருந்து வந்திருக்கிறது. அவர் முதல் இன்னிங்சில் நன்றாக பேட்டிங் செய்ததோடு இரண்டாவது இன்னிங்ஸில் உறுதியாக பேட்டிங் செய்தார்.

- Advertisement -

இந்திய அணியில் ஸ்வீப் ஆடக்கூடியவர்கள் மிகவும் குறைவு. ரோஹித் சர்மா மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் இதை விளையாடுவார்கள். தற்பொழுது ஒருவர் அணியில் இல்லை.

இதையும் படிங்க : “வெற்றிக்கு எல்லா பெருமையும் ஒருவருக்குதான்.. அவர் நம்பிக்கைதான் காரணம்” – மெக்கலம் பேச்சு

எனவே தற்பொழுது அணியில் இருக்கும் ரஜத் பட்டிதார் மற்றும் சர்ப்ராஸ் கான் இருவரையும் வைத்து பார்க்கும் பொழுது, வழக்கத்திற்கு மாறான ஷாட்களை சிறப்பாக விளையாடக்கூடிய சர்ப்ராஸ் கானுக்கு வாய்ப்பு தருவது சரியான ஒன்றாக இருக்கும். அவர் சுழற்ந்து வீச்சுக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடக்கூடியவர்” என்று கூறி இருக்கிறார்.