தினேஷ் கார்த்திக் லைப் மாறியதே இவரால் தான் – டிகே-வின் தந்தை பேட்டி!

0
7715

தினேஷ் கார்த்திக்கின் வாழ்க்கை இவரால் தான் மாற்றம் அடைந்தது என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் அவரது தந்தை கிருஷ்ண குமார்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் தற்போது டி20 உலக கோப்பை சென்றுள்ள இந்திய அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலியாவில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

37 வயதான இவர் 2004 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமானார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் லெஜன்ட் மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கு அறிமுகமாவதற்கு முன்னரே தினேஷ் கார்த்திக் அறிமுகமாகி விளையாடியுள்ளார். அணியில் வருவதும் போவதுமாக இருந்த தினேஷ் கார்த்திக், கடந்த சில வருடங்களாக மிகச் சிறப்பாக செயல்பட்டு எப்படி இந்திய அணிக்குள் நுழைந்தார் என்பதை தனது சமீபத்திய பேட்டியில் தினேஷ் கார்த்திக்கின் தந்தை கிருஷ்ணகுமார் பகிர்ந்துள்ளார்

கொல்கத்தா அணிக்காக விளையாடிய போது, உள்ளூர் கிரிக்கெட் லெஜெண்ட் மற்றும் ஐபிஎல் அணியின் கோச் அபிஷேக் நாயர் அறிமுகமாகியுள்ளார். அவர்தான் தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் வாழ்க்கையை முற்றிலுமாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவதற்கு உதவிகரமாக இருந்தார் என்று தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இது பற்றி அவர் கூறுகையில், “தினேஷ் கார்த்திக்கின் வாழ்க்கையில் அபிஷேக் நாயர் வந்த பிறகு முற்றிலுமாக மாறிவிட்டது. காலை இரண்டு மணிக்கெல்லாம் எழுந்து பயிற்சியை துவங்கி விடுவார்.

- Advertisement -

டாப் ஆர்டரில் களமிறங்கி வந்த தினேஷ் கார்த்திக் பவர் ஹிட் செய்வதற்காக தனியாக ஒருவரை வேலைக்கு எடுத்து, அவரை வைத்து தீவிர பயிற்சியில் ஈடுபடுவார். தினமும் தினேஷ் கார்த்திக் இரண்டு மணிக்கு தான் எழுந்து பயிற்சிக்கு செல்வார். அவ்வபோது நானும் செல்வது வழக்கம். அப்போது அபிஷேக் நாயர் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவருக்கும் இடையே நடக்கும் பேச்சு வார்த்தைகளை என்னை வீடியோ எடுக்க சொல்லுவார். பிறகு பார்த்து பயன்பெறுவதற்கு அது பயன்படுவது என்றும் என்னிடம் கூறுவார். அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால் ஒரு சாதாரண மனிதனாக என்னால் அதை எப்படி என்று எடுத்துக் கூற முடியவில்லை.” என்று பேசினார்.

2022 ஆம் ஆண்டு ஐ பி எல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக எடுக்கப்பட்ட தினேஷ் கார்த்திக், 16 போட்டிகளில் 330 ரன்கள் அடித்திருந்தார். குறிப்பாக அவரது ஸ்ட்ரைக் ரேட் 187 ஆகும். இதன் காரணமாக ஃபினிஷிங் ரோலில் விளையாடுவதற்கு இந்திய அணியில் எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -