“சாம்சானுக்காக ராகுல் டிராவிட்டிடம் பொய் சொன்னேன்!” – ஸ்ரீசாந்த் வெளியிட்ட ஆச்சரியமான தகவல்!

0
698
Sanju

இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில் வேகம் மற்றும் ஸ்விங் இரண்டிலும் கவனம் ஈர்த்தவராக கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் ஆரம்பத்தில் இருந்தார்!

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகளுக்கு எதிராக மிக முக்கியமான போட்டிகளில் அவருடைய பந்துவீச்சு மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

மேலும் அவர் மகேந்திர சிங் தோனி தலைமையில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை என இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற வீரராக இருந்திருக்கிறார்.

2013ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்ரீசாந்தை எப்படி உள்ளே கொண்டு வந்தேன் என்றும், அதற்கு என்ன பொய் சொன்னேன் என்று, கேரள இளம் வீரர்களுக்கு எப்படியான உதவிகள் எல்லாம் செய்து இருக்கிறேன் என்றும், அவர் பல விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

இதுகுறித்து ஸ்ரீசாந்த் கூறும் பொழுது
“நான் ஸ்ரீசாந்தை அறிமுகப்படுத்திய பொழுது ராகுல் பாய் நான் சொல்வதை கேட்கக் கூடியவராக இருந்தார். நான் அவரிடம் சஞ்சுவை காட்டி இந்த குழந்தை என்னை ஆறு சிக்ஸர்கள் அடித்தது என்று பொய் சொன்னேன். அதைக் கேட்ட அவரே ஏன் இப்படி பொய் சொல்கிறீர்கள் என்று சிரித்தார்.

- Advertisement -

ஆனால் சஞ்சு ஒரு சில பயிற்சி போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. ஆனால் ராகுல் பாய் அவர் பேட்டிங் செய்வதை பார்த்து வந்து என்னிடம் கூறும் பொழுது ‘சஞ்சுவை வேறெங்கும் அறிமுகப்படுத்தாதீர்கள். நாங்கள் அவரை ஒப்பந்தம் செய்கிறோம். அவருக்கு ஆட்டங்கள் கிடைக்குமா? என்று தெரியாது ஆனால் அவரை ஒப்பந்தம் செய்ய விரும்புகிறோம்’ என்று கூறினார்.

நான் சஞ்சுவை கேரளா அணிக்குள் கொண்டு வந்த பொழுது கூட பலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அணியில் நாங்கள் தான் பெரிய பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர், எப்படி இவரை விட முடியும் என்று சொன்னார்கள். என் நண்பர்கள் ஏன் குழந்தையை எல்லாம் அணிக்குள் கொண்டு வர என்று கேட்டார்கள்.

எங்களால் ஒரு இளம் வீரரை உருவாக்க உடைக்கவோ எதுவும் முடியாது. நான் எப்பொழுதும் இளம் வீரர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த நினைத்தேன். நான் இந்தியாவிற்கு விளையாடுவதற்கு முன்பும் இதைத்தான் செய்தேன்.

நீங்கள் அதிகார நிலையில் இருந்தால், அதிகார நிலையில் இருப்பவர்களை சந்திப்பவராக இருந்தால், அவர்கள் மூலம் உங்கள் மக்களுக்கு, உள்ளூர் மக்களுக்கு உதவ முடியும் என்றால், நீங்கள் செய்ய வேண்டும். சரியான நேரத்தில் நான் சஞ்சுவை சந்திப்பதற்கு காரணமாக இருந்த அவரது பயிற்சியாளர் ஜார்ஜிக்குதான் நன்றி சொல்ல வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!