இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவர் லிவிங்ஸ்டன். எந்தவிதமான பந்து வீச்சுக்கு எதிராக வும் அதிரடியாக ஆடி சிறப்பாக ரன்கள் குவிக்க இவரால் முடியும். அதேபோல பந்துவீச்சிலும் வலது கை பேட்டிங் வீரர்களுக்கு லெக் ஸ்பின் முறையிலும் இடதுகை பேட்டிக் வீரர்களுக்கு ஆப் ஸ்பின் முறையிலும் பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தவும் இவரால் முடியும். இவர் இங்கிலாந்து அணிக்காக டி20 உலக கோப்பையில் பங்கேற்றிருந்தார். அரையிறுதி ஆட்டத்தில் இவர் 10 பந்துகளில் 17 ரன்களும் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இவர் தற்போது தன்னுடைய சிறந்த டி20 அணியை வெளியிட்டுள்ளார்.
பலரும் இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித்தைத் தான் தங்களது அணியின் தொடக்க வீரராக தேர்வு செய்வார். ஆனால் இவர் விராத் கோலியையும் சசக இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லரையும் தேர்வு செய்துள்ளார். மூன்றாம் நிலை வீரராக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சனை தேர்வு செய்துள்ளார்.
அணியின் முக்கிய பேட்டிங் வீரராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டிவிலியர்ஸை அவர் தேர்வு செய்துள்ளார். டிவிலியர்ஸ் எப்பேர்பட்ட பந்து வீச்சையும் சிறப்பாக அடித்து நொறுக்கும் தகுதி படைத்தவர். மேலும் இந்த அணியின் ஆல்ரவுண்டர்களாக பொல்லார்டு, ரசல் மற்றும் ஜடேஜா ஆகியோரை இவர் தேர்வு செய்துள்ளார். வழக்கமாக டி20 அணியின் கேப்டன் மட்டும் விக்கெட் கீப்பராக பலரால் தெரிவு செய்யப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை இவர் தேர்வு செய்யவில்லை.
பலரும் ஆச்சரியப்படும் விதமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் மற்றும் கேப்டனான வாசிம் அக்ரமை இவர் தேர்வு செய்துள்ளார். இதுவரை வெறும் ஐந்து டி20 போட்டிகள் மட்டுமே வாசிம் அக்ரம் விளையாடியுள்ளார். வாசிமுக்கு பக்கபலமாக லசித் மலிங்கா மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சரை லிவிங்ஸ்டன் தேர்வு செய்துள்ளார். ஒரே ஒரு ஸ்பின் பவுலராக ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கானை இவர் தேர்வு செய்துள்ளார்.
லியாம் லிவிங்ஸ்டன் தேர்வு செய்த சிறந்த டி20 அணி
கோலி, பட்லர், பீட்டர்சன், டிவில்லியர்ஸ், பொல்லார்டு, ரசல், ஜடேஜா, வாசிம், ரஷித் கான், மலிங்கா மற்றும் ஆர்ச்சர்.