“NO. 1 இடத்தை உலக கோப்பையாக மாத்துவோம்.. நல்லா செய்யாம இங்க வரல!” – துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடி பேச்சு!

0
969
Hardik

உலகக்கோப்பையில் நான்காவது நாளான இன்று ஐந்தாவது போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக் கோப்பையை நடத்தும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன!

இந்தப் போட்டிக்கு டாஸ் போடப்படும் வரை இந்திய அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் சுக்மன் கில் விளையாடுவாரா? மாட்டாரா? என்கின்ற எதிர்பார்ப்பு இருக்க செய்யும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவரது உடல் நிலையை கடைசி வரை கண்காணிப்போம் என, கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரும் கூறி இருக்கிறார்கள். எனவே கடைசி நேரத்தில்தான் முடிவை அறிய முடியும்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை தற்போது உலகக்கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் கிடையாது. அவர்கள் தங்களுடைய பேட்டிங் நீளத்தை எவ்வளவு தூரம் அமைப்பார்கள்? என்பது மட்டுமே இதில் உள்ள சுவாரசியமான விஷயம்.

மேலும் இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளில் எந்த மைதானத்தின் ஆடுகளமும் பெரிய அளவுக்கு சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கவில்லை. அதே சமயத்தில் சென்னை மைதானத்தின் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று பலரும் பேசி வருகிறார்கள். அப்படி இருக்குமா? இல்லையா? என்பது இன்னொரு தனி சுவாரசியம்.

நடப்பு உலகக் கோப்பையில் நடைபெற இருக்கும் பெரிய போட்டியாக இந்தியா ஆஸ்திரேலியா மோதிக் கொள்ளும் போட்டி அமைந்திருக்கிறது. எனவே இன்று சென்னை சேப்பாக்கம் மைதானம் அதிரும் என்பதில் சந்தேகம் கிடையாது. முதல் முறையாக இந்த உலகக் கோப்பையில் ஒரு மைதானம் ரசிகர்களால் நிரம்ப இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த போட்டி குறித்து பேசி உள்ள இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா “எங்களிடம் சில உலகத்தரம் வாய்ந்த பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். நாங்கள் ஒருங்கிணைந்து அச்சமின்றி விளையாட வேண்டும். அழுத்தத்தையும் எதிர்பார்ப்பையும் நமக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, நாங்கள் செய்ததை அப்படியே தொடர வேண்டும்.

இது நிறைய எதிர்பார்ப்புகளுடன் மிக உற்சாகமாக இருக்கிறது. அதே நேரத்தில் நாங்கள் நிறைய அன்பு மற்றும் ஆதரவை பெறப்போகிறோம். இது எங்களிடமிருந்து எங்களுடைய சக்தியை கொண்டு வரப் போகிறது.

நாங்கள் சமீபத்தில் நம்பர் ஒன் அணியாக இருந்து வருகிறோம். நிச்சயம் நாங்கள் நன்றாக செய்து உள்ளோம். இதை நாங்கள் உலககோப்பைகளாக மாற்ற வேண்டும். இந்த ஆண்டு எங்களால் முடியும் என்று நம்புகிறோம்!” என்று கூறியிருக்கிறார்!