“ரோகித் கேப்டன்சிய முதல்ல பேசனும்.. நேத்து எங்களுக்கு சிறப்பான ஒரு சம்பவம் பண்ணினார்!” – ஹார்மிசன் சிறப்பு பாராட்டு!

0
3584
Rohit

இந்திய கேப்டன்களில் ரோஹித் சர்மா சற்று வித்தியாசமான முறையில் அணியை வழிநடத்தக்கூடிய கேப்டனாக இருந்து வருகிறார். மேலும் இதுவரை பார்த்த இந்திய கேப்டன்களில் இவர் மிகவும் தாக்குதல் பாணியைக் கொண்டவராக இருக்கிறார்.

ரோஹித் சர்மா முதலில் கேப்டனாக பொறுப்பேற்ற பொழுதே இந்திய அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் விக்கெட்டை பற்றி கவலைப்படாமல், தைரியமாக விளையாட வேண்டும் இன்டெண்ட் காட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

- Advertisement -

இதற்கு ரோஹித் சர்மாவே முதலில் அதிரடியாக விளையாடுவது என்று ஆரம்பித்தார். அவர் வழக்கமாக சில பத்துகளை எடுத்துக்கொண்டு அதற்குப் பிறகு அதிரடியாக விளையாடக் கூடியவர். ஆனால் அணிக்குள் புதிய ஆட்ட கலாச்சாரத்தை கொண்டு வரவேண்டும் என்பதற்காகத் தன் ஆட்ட முறையை மாற்றிக் கொண்டார்.

மேலும் யாருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் சீக்கிரத்தில் அவர்களை அணியின் வட்டத்திற்குள் இருந்து நீக்காமல் பார்த்துக் கொண்டார். வெளியில் இருந்தாலும் எப்படியும் அவர்களுக்கான வாய்ப்பு கொடுப்பதை உறுதி செய்தார். மிக முக்கியமாக அணியில் யாருக்கு எந்த இடத்தை கொடுத்தாலும் அவர்கள் விளையாட வேண்டும் என்பதை ஆரம்பத்தில் இருந்து தெளிவுபடுத்தினார்.

இதேபோல் அவரது கேப்டன்ஷியில் பந்துவீச்சாளர்களை அவர் பயன்படுத்துவது ரன்னை கட்டுப்படுத்துவதற்காக இருப்பது கிடையாது. தொடர்ச்சியாக எதிரணி மீது அழுத்தத்தை ஏற்றி விக்கெட்டை கைப்பற்றி கொண்டே இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நேற்றும் ஆட்டத்தை வளர்க்க விரும்பாமல் அவர் அப்படியான கேப்டன்ஷியே செய்தார்.

- Advertisement -

இதுகுறித்து இங்கிலாந்தின் ஸ்டீவ் ஹார்மிசன் கூறும் பொழுது “ரோஹித் சர்மா இந்திய அணியை வழிநடத்துவதில் கேப்டனாக மிகச் சிறப்பாக செயல்பட்டார். இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஒரு விக்கெட்டை பெற்றவுடன், அங்கிருந்தே ரோஹித் சர்மா சுழற் பந்துவீச்சாளர்களை கொண்டு வந்திருக்க முடியும்.

ஆனால் அப்படி கொண்டு வந்து ஆட்டத்தை 40 முதல் 50 ஓவர்களுக்கு கொண்டு செல்ல அவர் விரும்பவில்லை. அவரிடம் ஐந்து பந்துவீச்சாளர்கள்மட்டும் இருந்தாலும் கூட, தைரியமாக மீண்டும் வேகப்பந்துவீச்சாளர்களைக் கொண்டு வந்து தொடர்ச்சியாகத் தாக்கினார். காரணம் இங்கிலாந்து அணியை அவர் 30 முதல் 35 ஓவர்களுக்குள் ஆல் அவுட் செய்ய வேண்டும் என்று விரும்பினார். இதனால்தான் அவர் சீக்கிரத்தில் சுழற் பந்துவீச்சாளர்களிடம் செல்வதில்லை.

நேற்றைய ஆட்டத்தின் ஆரம்பப் பகுதியில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டதற்கான பாராட்டை நிச்சயம் நீங்கள் அவருக்கு கொடுக்க வேண்டும்!” என்று விளக்கமாக புகழ்ந்து பாராட்டி கூறியிருக்கிறார்!