“இந்த முறை இந்தியாவை அடிப்போம்!” – பழைய பாசத்தில் பொங்கும் முன்னாள் பயிற்சியாளர்!

0
1157
Justin Longer

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஓட்டம் தற்பொழுது மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா இந்தியா சவுத் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகள் இந்த ஓட்டத்தில் முன்னணியில் இருக்கின்றன!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான கடைசி தொடராக ஆஸ்திரேலிய அணிக்கும் இந்திய அணிக்கும் ஒரே தொடர் அமைந்திருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்க பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியா அணி இந்தியா வருகிறது.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. கடைசியாக இந்தியாவில் 2004 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றது அப்பொழுது ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக இருந்தவர் ஆடம் கில்கிறிஸ்ட். இவர்தான் இந்தியாவில் கடைசியாக டெஸ்ட் தொடரை வென்ற கேப்டன் ஆஸ்திரேலியா. இவருக்கு முன்னதாக பில் லாரி மட்டும் 1969ல் வென்று இருக்கிறார்.

தற்பொழுது இதற்கு முடிவு கட்ட பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மும்முரமாக இருக்கிறது. இந்த அணி உடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு மனக்கசப்பால் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய ஜஸ்டின் லாங்கர் தற்பொழுது இந்த அணிக்கு ஆதரவாக சில முக்கிய கருத்துகளை பகிர்ந்து உள்ளார்.

இது பற்றி அவர் பேசும் பொழுது
” நான் ஆஸ்திரேலியா அணியை விட்டு நகர்ந்து விட்டேன் ஆனால் அது எனக்கு வருத்தம் இல்லை. இதைத் தாண்டி எங்கள் வீரர்கள் இந்திய மண்ணில் வெற்றி பெறுவதை நான் ஆவலாக எதிர்பார்ப்பேன். அவர்களால் அதைச் செய்ய முடிந்தால் மிக நன்றாக இருக்கும். இந்தத் தொடருக்காக இப்பொழுதே என்னால் காத்திருக்க முடியவில்லை. இது மிகவும் கடினமான ஒரு தொடர். 2004 ஆம் ஆண்டு நாங்கள் இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்றதை இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். தற்போதைய ஆஸ்திரேலியா அணி சமநிலை உள்ள நம்பிக்கையான அணியாகும். இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்க அவர்களுக்கு நல்ல ஒரு வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். இது எனது எவரெஸ்ட் பயணம் போல கடினமானது!” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” அணியில் இரண்டு பெரிய சாதகம் உள்ள வீரர்கள் இருக்கிறார்கள். பேட்டிங்கில் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் களமிறங்கும் வீரர்கள் இருவரும் சராசரியாக 60 ரன்கள் கொண்டு உள்ளார்கள். மேலும் துவக்க வீரர்களும் அனுபவமானவர்கள். இவர்கள் நன்றாக சுழற் பந்த வீச்சை விளையாடக்கூடியவர்கள் மேலும் ஒரு ரன் பசியோடு இருப்பவர்கள். இது மட்டும் இல்லாமல் டிராவிட் மிக அருமையாக பேட்டிங் செய்கிறார். கேமரூன் கிரீன் அணிக்குள் வருவார். இது நல்ல சமநிலையை அளிக்கிறது. உங்களிடம் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சுக் கூட்டணி இருக்கிறது மேலும் உலகின் சிறந்த சுழற் பந்துவீச்சாளர் இருக்கிறார். கடவுளே இவர்கள் நம்ப முடியாத அளவிற்கு சமநிலையான அணியை கொண்டிருக்கிறார்கள்” என்று புகழ்ந்து தள்ளி இருக்கிறார்!