“தயவுசெய்து ஜெய்ஸ்வாலை விட்டு விடுங்கள்.. இதுவரைக்கும் செஞ்சது போதும்” – கம்பீர் பேட்டி

0
538
Gambhir

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து 209 ரன்கள் குவித்திருக்கிறார்.

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி மொத்தமாக 396 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் ரன்களை கழித்து விட்டு பார்த்தால், மொத்த இந்திய அணியும் சேர்ந்து 187 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறது.

- Advertisement -

மேலும் அவர் இந்த போட்டியில் ரண்களை குவித்ததோடு மட்டும் இல்லாமல், புத்திசாலித்தனமாகவும் விளையாடினார். இதன் காரணமாக ஜெய்ஸ்வால் மீது நிறைய பேர் தங்களது பாராட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்.

முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் இந்த அளவுக்கு பேட்டிங்கை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால், இந்திய அணிக்கு இந்த ஆண்டின் துவக்கமே மிக மோசமாக அமைந்திருக்கும்.

காரணம் இந்த ஆண்டின் மிகப்பெரிய தொடரில் இந்திய அணி விளையாடிக் கொண்டிருக்கிறது. முதல் போட்டியை இங்கிலாந்து அணி வென்று விட்டது. இந்த நிலையில் இரண்டாவது போட்டியையும் இங்கிலாந்து வென்று இந்தியா தோற்றால், இந்தத் தொடரையே இந்தியா இழக்க வேண்டியதாக அமையலாம்.

- Advertisement -

இதன் காரணமாக முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் பேசும் பொழுது “ஜெய்ஸ்வாலின் சாதனைக்காக நான் அவரை வாழ்த்த விரும்புகிறேன். ஆனால் அதைவிட முக்கியமாக அந்த இளைஞரை விளையாட விடுங்கள் என்று எல்லோருக்கும் சொல்ல விரும்புகிறேன்.

இந்தியாவில் மிகக் குறிப்பாக ஊடகங்கள் எதையும் மிகைப்படுத்தி செய்வதை நாம் கடந்த காலங்களில் பார்த்திருக்கிறோம். ஏதாவது சாதனை செய்யும் பொழுது வீரர்களுக்கு ஏதாவது ஒரு பட்டத்தை கொடுத்து ஹீரோக்கள் போல மாற்றி விடுவார்கள். இதனால் அந்த வீரர்கள் மேல் உருவாகும் அழுத்தம் அவர்களை இயல்பான விளையாட்டை விளையாட முடியாமல் செய்து விடும்.

இதையும் படிங்க : “பும்ராவின் 6 விக்கெட்.. நான் இவருக்குத்தான் நன்றி சொல்வேன்” – ஜாகிர் கான் பேட்டி

கில் வளரட்டும் அவரது கிரிக்கெட்டை ரசிக்கட்டும். அவர் தரமான வீரர் என்பதால் அவருக்கு கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். அவர் கடந்த காலத்தில் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். இதன் காரணமாகத்தான் இந்திய அணிக்கு விளையாடுகிறார்” என்று கூறி இருக்கிறார்.