“பும்ராவின் 6 விக்கெட்.. நான் இவருக்குத்தான் நன்றி சொல்வேன்” – ஜாகிர் கான் பேட்டி

0
197
Zaheer

இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, தனி ஒருவராக போட்டியைத் திருப்பி இந்தியாவின் கையில் கொடுத்திருக்கிறார்.

போட்டி நடைபெறும் விசாகப்பட்டினம் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கின்ற காரணத்தினால், இந்திய அணி எடுத்த 396 ரன்கள் போதாது, மேலும் இங்கிலாந்து அதிரடியான முறையில் விளையாடுவதால், இந்த போட்டியிலும் அணியின் கையே ஓங்கி இருக்கிறது என்று கிரிக்கெட் வல்லுனர்களால் கணிக்கப்பட்டது.

- Advertisement -

இந்திய அணி ஆடுகளத்தை சுழற் பந்துவீச்சுக்கு பெரிதும் நம்பி மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை அணியில் வைத்திருந்தது. மேலும் இதன் காரணமாகவே கொஞ்சம் அனுபவம் இருக்கின்ற முகமது சிராஜிக்கு ஓய்வு கொடுத்து, அனுபவம் குறைவான வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமாரை கொண்டு வந்தது.

இந்த நிலையில் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்க, இங்கிலாந்து அணியின் பேட்டிங் அணுகுமுறை ஆக்ரோஷமான முறையில் அமையும் என்பதால், இந்திய அணியின் பௌலிங் யூனிட் மீது பெரிய கேள்விக்குறி இருந்தது.

இந்த நிலையில் முதல் இரண்டு விக்கெட்டுகளை குல்தீப் மற்றும் அக்சர் படேல் இருவரும் வீழ்த்தி ஒரு தொடக்கத்தை உருவாக்க, அங்கிருந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்தின் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி பும்ரா போட்டியை இந்தியா பக்கம் திருப்பினார்.

- Advertisement -

இந்த போட்டியில் ஜாக் கிரவுலி அதிரடியாக 78 பந்தில் 76 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து ஜோ ரூட் உள்ளே வந்ததும், கேப்டன் ரோகித் சர்மா உடனடியாக பந்தை பும்ரா கையில் கொடுத்தார். இதற்கு கை மேல் பலனாக கேப்டனுக்கு ரூட் மற்றும் போப் என இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி பும்ரா கொடுத்தார். இதுதான் போட்டி இந்தியா பக்கம் திரும்ப முக்கிய காரணம். ரோஹித் சர்மாவின் இந்த முடிவுக்கு குறித்து ஜாகீர் கான் பெரிதும் பாராட்டி இருக்கிறார்.

இதுகுறித்து ஜாகீர் கான் கூறும் பொழுது “பும்பாவை ஜாக் கிரவுலி ஆட்டம் இழந்ததும் கொண்டுவரப்பட்டது நன்கு சிந்தித்து எடுக்கப்பட்ட மிகச் சிறப்பான முடிவாகும். அந்த நேரத்தில்தான் ரூட் உள்ளே வந்திருந்தார் என்பதை ரோகித் உணர்ந்திருந்தார்.

இதையும் படிங்க : SLvsAFG டெஸ்ட்.. 2 சதம்.. 410 ரன்.. இலங்கை ஆப்கான் அணிகளுக்கு இடையே பரபரப்பான போட்டி

மேலும் கடந்த போட்டியில் பெரிய சேதத்தை உருவாக்கிய போப் களத்தில் இருந்தார். எனவே உங்கள் சிறந்த பந்துவீச்சாளரிடம் போக வேண்டியது அவசியம். இந்த நேரத்தில்தான் உம்ரா தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தினார். இதற்கு ரோகித் சர்மாவிற்கு நன்றி சொல்ல வேண்டும் ” என்று கூறி இருக்கிறார்.