“ஹர்திக் என்ன வேணா செய்யட்டும்.. ஆனா இது நடக்காது..!” – இர்பான் பதான் அதிரடி!

0
766
Hardik

உலகக்கோப்பை தொடர் முடிந்து இந்திய கிரிக்கெட் வட்டாரம் ஐபிஎல் தொடருக்கு வேகமாக தயாராகி வருகிறது. இந்த வகையில் மினி ஏலத்திற்கு தயாராகும் வகையில், வீரர்கள் விடுவிப்பு மற்றும் பரிமாற்றம் ஆகியவை முடிந்திருக்கிறது.

வீரர்கள் பரிமாற்றம் செய்வதில் ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டன் ஹர்திக் பாண்டியா அந்த அணியை விட்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்று இருக்கிறார்.

- Advertisement -

இது இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்த விஷயத்தை அடியோடு மறக்க செய்து, மொத்தப் பார்வையையும் தன் மீது திருப்பி இருக்கிறது.

காரணம் இப்படி ஒரு வீரர் பரிமாற்றம் என்பது ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்ததில்லை. மேலும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் வீரராக இல்லாமல் அதுவும் வெற்றிகரமான கேப்டனாக இருந்தவர் இன்னொரு அணிக்கு செல்வது மிகப்பெரிய ஆச்சரியத்தை உண்டுசெய்திருக்கிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவுக்கு சமமான ஒரு வீரரை மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து பெறாமலே அவரை கொடுத்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி எல்லோரையும் ஒருவித சந்தேகத்திற்கும் கொண்டு சென்று இருக்கிறது என்பதே உண்மை.

- Advertisement -

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் சென்றது குறித்து பேசி உள்ள இர்ஃபான் பதான் “ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு மாபெரும் வீரர். அந்த அணியை அவர் ஐந்து ஐபிஎல் பட்டங்கள் வெல்வதற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அவர் சுறுசுறுப்பாக இருக்கும் வரை அவர்தான் கேப்டனாக இருப்பார்.

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியை ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருந்து வழிநடத்த வாய்ப்பு கிடையாது. மும்பை இந்தியன்ஸ் அணியில் பல ஆல் ரவுண்டர்கள் இருக்கிறார்கள்.

இதன் காரணமாக அந்த இடத்தை வலுப்படுத்துவதற்காக ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்லவில்லை. மும்பை எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கிறது. ரோகித் சர்மா ஓய்வு பெற்றவுடன் கேப்டன் பொறுப்பை எடுப்பதற்கான ஒரு நபரை பற்றி சிந்திக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!