லெஜண்ட்ஸ் கிரிக்கெட் டிராபி.. 15 ஓவர் 185 ரன்ஸ்.. ரெய்னா அதிரடி அரைசதம்.. யுவராஜ் அணி அபார வெற்றி

0
498

இலங்கையில் நடைபெற்று வரும் லெஜெண்ட் கிரிக்கெட் டிராபியில்  யுவராஜ் சிங் தலைமையிலான    நியூயார்க் சூப்பர் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, சுரேஷ் ரெய்னா தலைமையிலான டெல்லி டெவில்ஸ் அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இலங்கையின் பல்லிகேலே மைதானத்தில் நடைபெற்ற ஆறாவது போட்டியில் நியூயார்க் சூப்பர் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும், டெல்லி டெவில்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் இழந்த நியூயார்க்  அணி முதலில் பேட்டிங் செய்தது. இதன்படி பேட்டிங் செய்த நியூயார்க் சூப்பர் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதில் நியூயார்க் அணியின் தொடக்க ஆட்டக்காரர் திரிமன்னே அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் 11 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என விளாசி 90 ரன்கள் குவித்தார். டெல்லி அணியின் பந்துவீச்சை பதம் பார்த்த அவர் இறுதியாக அனுரீத் சிங்கின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது ரசிகர்களுக்கு இது சற்று ஏமாற்றமாக அமைந்தது.

பின்னால் வந்த பேட்ஸ்மேன்கள் துரித ரன்களை சேர்க்க 15 ஓவர்களில் 185 ரன்கள் குவித்தது நியூயார்க் சூப்பர் ஸ்டைக்கர்ஸ் அணி. இதில் டெல்லி அணியில் அதிகபட்சமாக அனுரீத் சிங் மற்றும் மல்ஹோத்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். பின்னர் 186 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் சுரேஷ் ரெய்னா தலைமையில் ஆன டெல்லி அணி களமிறங்கியது.

தொடக்கத்திலேயே சரிவை  சந்தித்த டெல்லி அணி 33 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை பரிதாபமாக இழந்தது. தொடக்க ஆட்டக்காரர் மார்னே வான் விக் 10 ரன்களிலும், அமிர்தோஸ் சிங் நான்கு ரன்களிலும் வெளியேற, அதற்குப் பிறகு வந்த பெர்குசன் 8 ரன்களில் வெளியேறினார்.

- Advertisement -

இதற்குப் பின்னர் களம் இறங்கிய கேப்டன் சுரேஷ் ரெய்னா விக்கெட் சரிவினை தடுத்து நிறுத்தி சிறப்பான ஆட்டத்தை எதிர்கொண்டார். 35 பந்துகளில் 5 பவுண்டரி, இரண்டு சிக்சர் என குவித்து 50 ரன்கள் விளாசினார். இவர் ஒருபுறம் நிலைத்து நின்று விளையாடினாலும், பின்னால் வந்த வீரர்கள் சரியான பங்களிப்பை அளிக்க தவறினார்.

இதையும் படிங்க: WPL 2024.. ஆர்சிபி-க்கு அடிக்கும் லக்.. குஜராத் உபி மேட்சில் நடந்த செம டிவிஸ்ட்.. பிளே-ஆப் வாய்ப்பு எப்படி

அம்பத்தி ராயுடு 19 ரன்களிலும், பிரண்டன் டெய்லர் அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் ஒரு பவுண்டரி 2 சிக்சர் என 19 ரன்கள் விளாசினார். இருப்பினும் தொடக்கத்திலேயே பந்துகளை வீணடித்ததால் டெல்லி அணியால் 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே முடிந்தது. நியூயார்க் அணியில் அதிகபட்சமாக உடான்னா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் நியூயார்க் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.