இந்திய கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் இடதுகையில் பேட்டிங் செய்து வலது கையில் பௌலிங் போடும் 5 வீரர்கள்

0
1338
Sourav Ganguly Bowling

கிரிக்கெட்டை பொறுத்தவரையில் ஒரு சில வீரர்கள் பேட்டிங் செய்வதில் ஒரு செயலையும் அதேசமயம் பவுலிங் செய்வதில் ஒரு ஸ்டைலையும் கடைப்பிடிப்பார்கள். அது இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விதிவிலக்கல்ல.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் ஒரு சிலர் ஒரு ஸ்டைலில் பேட்டிங் விளையாடி அதேசமயம் பௌலிங் வீசும் போது வேறு ஸ்டைலில் பந்து பேசுவார்கள். அப்படிப்பட்ட இந்திய வீரர்களை பற்றி தற்போது பார்ப்போம்

- Advertisement -

1. கௌதம் கம்பீர்

Gautam-Gambhir

இந்திய அணிக்காக ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக பல போட்டிகளில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் தலைசிறந்த இடதுகை பேட்ஸ்மேன் வீரர்களில் இவர் நிச்சயம் என்றுமே இடம் பெறுவார். குறிப்பாக 2011-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் இவர் அடித்த அந்த 97 ரன்கள் இந்திய அணியின் வெற்றிக்கு துணையாக அமைந்தது என்பதுதான் உண்மை.

பேட்டிங்கில் இடது கையில் விளையாடினாலும் இவர் பவுலிங் வீசுவதில் வலதுகையை பயன்படுத்துவார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இவர் மொத்தமாக 3 ஓவர்கள் வலது கையில் பந்து வீசி இருக்கிறார். இவர் ஒரு லெக் ஸ்பின் பவுலர் என்பது குறிப்பிடத்தக்கது.

2. ராபின் சிங்

Robin Singh

இந்தியாவுக்காக ஆரம்ப காலகட்டங்களில் விளையாடிய ஒரு தலை சிறந்த ஆல்ரவுண்டர் வீரரான ராபின் சிங் பல போட்டிகளில் இந்திய அணிக்காக மிக சிறப்பாக விளையாடி இருக்கிறார். கௌதம் கம்பீர் ஐ போலவே இவரும் பேட்டிங் செய்வது இடது கையை பயன்படுத்தி பவுலிங் வீசுவதில் வலது கையை பயன்படுத்துவார். இவர் ஒரு மீடியம் வேகம் வீசும் பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஒருநாள் போட்டிகளில் இவர் மொத்தமாக 69 விக்கெட்டுகளையும் பஸ்ட் கிளாஸ் போட்டிகளில் இவர் மொத்தமாக 172 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இவர் பேட்டிங் பயிற்சியாளராக தற்போது இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. சுரேஷ் ரெய்னா

Raina Bowling

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் உம் இந்திய அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆனால் சுரேஷ் ரெய்னா இடது கையில் பேட்டிங் செய்ய கூடிய வீரர். இந்திய அணிக்காக விளையாடிய வீரர்களில் இவர் ஒரு மிகச்சிறந்த ஃபீல்டர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இவருடைய பங்களிப்பு அணியில் அதிகமாக இருந்தாலும் படிப்படியாக குறையவே இவருக்கான வாய்ப்பு இந்திய அணியில் மறுக்கப்பட்டது. அதன் காரணமாக சென்ற ஆண்டு இவர் தனது ஓய்வு அறிக்கையை அறிவித்துவிட்டார்.

பேட்டிங்கில் இடது கையில் விளையாடி அதேசமயம் பவுலிங்கில் இவர் வலது கையை பயன்படுத்துவார். இவர் அடிப்படையில் ஒரு வலதுகை ஆப் ஸ்பின் பவுலர் என்பது குறிப்பிடத்தக்கது.

4. சவுரவ் கங்குலி

மகேந்திர சிங் தோனிக்கு முன்பு இந்தியாவை மிகச் சிறப்பாக வழி நடத்திய ஒரு தலை சிறந்த கேப்டன் இவர். இவரது தலைமையின் கீழ் விளையாடிய வீரர்கள் அனைவரும் ஆகச் சிறந்த வீரர்களாக இந்திய அணிக்கு தங்களுடைய பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள். பழைய இந்திய அணியின் கட்டமைப்பை உடைத்து ஒரு புதிய பலமான இந்திய அணியை உருவாக்கியதில் இவருக்கு எப்பொழுதும் பங்கு உண்டு.

இடது கையில் இவர் பேட்டிங் செய்வதை பார்க்க ரசிகர்கள் தவம் குறிப்பாக ஆப் சைடில் இறங்கி வந்து இவர் அடிக்கும் சிக்சர்கள் மைதானத்தில் இருக்கும் அனைவரையும் கவர்ந்து விடும். பேட்டிங்கில் இடது கையை பயன்படுத்தி இவர் பௌலிங் வீசுவதில் வலது கையை பயன்படுத்துவார். அடிப்படையில் இவர் ஒரு மீடியம் வேகப்பந்து வீச்சாளர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தற்பொழுது பிசிசிஐ தலைவராக பங்கு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

5. வினோத் காம்ப்ளி

இளம் வயதில் நடந்த ஒரு உள்ளூர் தொடரில் சச்சின் டெண்டுல்கர் உடன் இணைந்து இவர்கள் இருவரும் அமைதிப் தற்போது வரை அனைவரையும் அசர வைக்கும். இவர்கள் அமைத்த பார்ட்னர்ஷிப் மொத்தமாக 664 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்காக இவர் 17 டெஸ்ட் போட்டிகளில் மற்றும் 107 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி சுமார் 3000 சர்வதேச ரன்களை குவித்துள்ளார். பேட்டிங்கில் இடது கையை பயன்படுத்தி இவர் பவுலிங்கில் தனது வலதுகையை பயன்படுத்துவார். தனது கேரியரில் ஒரு சில போட்டிகளில் சில முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். அடிப்படையில் இவர் ஒரு ஆஃப் பிரேக் பவுலர் என்பது குறிப்பிடத்தக்கது.