கேப்டனா ருதுராஜிகிட்ட எதையும் எதிர்பார்க்காதிங்க.. அதுக்கான காரணம் இதுதான் – லட்சுமிபதி பாலாஜி பேச்சு

0
126
Ruturaj

ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை ஒரு அணியை ப்ளே ஆப் சுற்றும் இறுதிப் போட்டிக்கும் அழைத்து சென்ற கேப்டனாகவும், அதிக முறை கோப்பையை வென்ற கேப்டனாகவும் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இருந்து வருகிறார். வெற்றிகரமான கேப்டனாக இருந்த போதிலும் கூட, நடப்பு ஐபிஎல் சீசனில் கேப்டன் பொறுப்பை இளம் வீரர் ருதுராஜிக்கு மாற்றி கொடுத்திருக்கிறார்.

இளம் வீரரான ருத்ராஜி கேப்டன் பொறுப்பில் எப்படி செயல்படுவார் என்கின்ற எதிர்பார்ப்புகள் நிறைய இருந்தது. ஆர் சி பி அணிக்கு எதிரான முதல் போட்டியில் முதல் மூன்று ஓவர்களில் ரன்கள் கசிந்ததும், முஸ்தஃபிஸூர் ரஹ்மானை உடனே கொண்டு வந்தார். அவர் அதே ஓவரில் இரண்டு விக்கெட் கைப்பற்றி திருப்புமுனையை உண்டாக்கினார். இதற்கு அடுத்து தீக்சனா இடம் செல்லாமல் மீண்டும் தீபக் சகரை கொண்டு வந்து மேக்ஸ்வெல் விக்கெட்டை கைப்பற்றினார்.

- Advertisement -

மேலும் பேட்டிங் செய்ய வந்த பொழுது சந்தித்த முதல் பந்தையே பவுண்டரிக்கு அடித்தார். இப்படி களத்தில் கேப்டனாக ஆன் பீல்ட் கேப்டன்சியிலும், அதே சமயத்தில் கேப்டன் பொறுப்பு பேட்டிங்கை எந்த விதத்தில் பாதிக்காமல் இயல்பாக வழக்கம்போல்விளையாடவும் முடிந்தவராக இருப்பது, முதல் போட்டியின் முடிவில் தெரிந்தது. இது சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் அதன் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில், இளம் வீரர் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர் கொள்ள இருக்கிறது. ருத்ராஜ் போலவே கேப்டன் பொறுப்பில் கில்லும் மிகச் சிறப்பாக முதல் ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக செயல்பட்டு இருந்தார். எனவே நாளை இரண்டு இளம் வீரர்களும் கேப்டன் பொறுப்பில் எப்படி மோதிக் கொள்வார்கள் என்கின்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் ருதுராஜ் கேப்டன் பொறுப்பு பற்றி பேசி இருக்கும் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி “சிஎஸ்கே அணிக்கு ருதுராஜ் கேப்டனாக கொண்டுவரப்பட்டது சரியான முடிவு என்று நினைக்கிறேன். கடைசியாக அவர் தலைமையில் இந்திய அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றது. அவரும் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்றார். மேலும் இரண்டு ஐபிஎல் கோப்பைகள் வென்ற அணியிலும் இருந்திருக்கிறார். எனவே அவரை சீசனின் ஆரம்பத்திலேயே கேப்டனாக கொண்டு வந்தது சரியானது என்று நினைக்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : என்ன ஹர்திக் குஜராத்துல செஞ்சதை.. மும்பை போய் மறந்துட்டிங்க – முகமது சமி விமர்சனம்

எனவே இங்கிருந்து இப்பொழுது ருத்ராஜுக்கு நல்ல இடம் கொடுக்கப்படும். ஆனால் தோனி உருவாக்கிய நீண்ட பாரம்பரியத்தை யாராலும் ஈடு செய்ய முடியாது என்று நினைக்கிறேன். அவர் ஆட்டங்களை வென்ற விதமும், அணியை வழி நடத்திய விதமும் அருமையானது. இந்த வகையில் ருதுராஜ் இடம் அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். மேலும் தோனிவுடனும் ஒப்பிட வேண்டாம். அவர் இங்கிருந்து வளர்ந்து அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லட்டும்” என்று கூறியிருக்கிறார்.