“அஸ்வின் என் போனை கட் பண்ணிட்டார்.. இதுதான் முன்னாள் வீரர்களுக்கு தரும் மரியாதையா?” – எல்.சிவராமகிருஷ்ணன் பேச்சு

0
165
Ashwin

நாளை இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் களம் இறங்கி தனது சர்வதேச நூறாவது டெஸ்ட் போட்டியை விளையாட இருக்கிறார்.

இதன் காரணமாக அவருக்கு பல முன்னால் வீரர்களும் இந்நாள் வீரர்களும் தங்களது வாழ்த்துக்களை பரிமாறி வருகிறார்கள். நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்ட ரவிச்சந்திரன் அஸ்வின் மனம் திறந்து பல விஷயங்கள் குறித்து பேசி இருந்தார்.

- Advertisement -

தமிழ்நாட்டில் இருந்து இந்திய கிரிக்கெட்டுக்கு தேர்வான வீரர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகப்பெரிய உயரத்தை எட்டி இருக்கிறார். இந்திய லெஜெண்ட் கிரிக்கெட்டர்களின் பட்டியலை உருவாக்கும் பொழுது அதில் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் மிக முக்கியமான இடத்தில் இருக்கும்.

கடந்த வருடத்தில் இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் எல்.சிவராமகிருஷ்ணன் சமூக வலைதளத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் மீது கடுமையான தாக்குதலை நடத்தினார்.

அவர் ரவிச்சந்திரன் அஸ்வினை சுயநலவாதி என்றும், இந்தியாவில் சுழற்சிக்கு சாதகமான ஆடுகளங்களை அமைக்க வைத்து மட்டுமே விக்கெட் எடுக்கிறார் என்றும், வெளிநாடுகளில் அவரால் விக்கெட் எடுக்க முடியாது என்றும் மிகவும் கீழே இறங்கி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் திருப்பி எந்த விதமான பதிலும் கூறவில்லை. மாறாக அழைத்துப் பேசி விட்டேன் என்பதாக மட்டுமே தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் மீண்டும் ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து பேசி உள்ள எல்.சிவராமகிருஷ்ணன் “ரவிச்சந்திரன் அஸ்வின் நூறாவது டெஸ்டில் விளையாட இருப்பதற்காக அவரை வாழ்த்துவதற்கு சிலமுறை நான் அவரை அழைத்தேன். ஆனால் அவர் என் போன் இணைப்பை துண்டித்து விட்டார். நான் அவருக்கு மெசேஜ் அனுப்பினேன். அவர் அதற்கும் பதில் அனுப்பவில்லை. இதுதான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான எங்களுக்கு கிடைக்கும் மரியாதை.

மரியாதை என்பது பண்பட்ட மனிதர்களிடமிருந்துதான் வரும். இதற்கு முன்பு அவரது பந்துவீச்சில் செய்ய வேண்டிய திருத்தம் குறித்து ஒரு ட்வீட் செய்திருந்தேன். நான் அவரை விமர்சிக்கவில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க : “இந்தியாவுல பவுலர்களுக்கு மரியாதை இல்ல.. அஸ்வினுக்கு கேப்டன் பதவி கொடுக்கல.. ஆனால்..” – அனில் கும்ப்ளே பேச்சு

இதற்கு சமூக வலைத்தளத்தில் ஒரு ரசிகர் “உண்மையில் நீங்கள் அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் எல்லா விஷயங்களுக்கும் அவர் திருப்பி மரியாதை தருவார் என்று எதிர்பார்க்கிறீர்களா? நீங்கள் செய்து கொண்டிருப்பதற்கு திருப்பி அவர் உங்களுக்கு பதில் தராமல் இருப்பதுதான், அவர் உங்களுக்கு தரும் பெரிய மரியாதை” என்றுபதிலடியாகக் குறிப்பிட்டிருக்கிறார்.