இந்தியாவுக்கு எதிரான இந்தியாவில் நடக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இங்கிலாந்து அனுபவம் மற்ற ஒரு சுழல் பந்து வீச்சு கூட்டணியை கூட்டி வந்திருக்கிறது.
நேற்று இந்திய அணிக்கு எதிராக அவர்கள் வீசிய 23 ஓவரில், அவர்கள் எவ்வளவு அனுபவம் மற்றவர்கள் ஆகவும் சீரற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது.
அதே சமயத்தில் பேட்டிங்கில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மிகச் சிறப்பாக செயல்பட்டு 70 ரன்கள் அடித்தார். ஆனால் அவரது கேப்டன்சி இன்று வரையில் கூட சிறப்பாக இல்லை. பந்துவீச்சாளரே பயன்படுத்துவது மற்றும் ஃபீல்டு செட் என தொடர்ந்து தவறு செய்கிறார்.
மேலும் இந்த போட்டிக்கு தேய்ந்த பந்தில் நல்ல முறையில் ரிவர்ஸ் ஸ்விங் செய்யக்கூடிய அனுபவ சாதனை வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சேர்க்காதது மிகப்பெரிய தவறாக அமைந்திருக்கிறது.
நேற்று கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் என்ன தவறு செய்திருக்கிறார் என்பதை, இந்திய லெஜெண்ட் அனில் கும்ப்ளே மிகவும் துல்லியமாக நேற்று கூறியிருக்கிறார். உதாரணமாக ஜெய்ஸ்வாலுக்கு எதிராக ஜோ ரூட்டை பயன்படுத்த தவறிவிட்டார் என்று கூறியிருந்தார். இன்று ரூட்டை ஜெய்ஸ்வாலுக்கு எதிராக பயன்படுத்தும் பொழுது, அவரது விக்கெட்டை அவர் கைப்பற்றி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனில் கும்ப்ளே பென் ஸ்டோக்ஸ் கேப்டன்சி பற்றி கூறும் பொழுது “ஜோரூட்டை பயன்படுத்தாமல் ஒரு பெரிய தவறை ஸ்டோக்ஸ் செய்து விட்டார் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர் உண்மையில் பந்தை திருப்பக் கூடியவர். அவரிடம் ஒரு நல்ல பௌலிங் ஆக்சன் இருக்கிறது. மேலும் களத்தில் இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் இருந்தார். மேலும் அஸ்வினிடம் இங்கிலாந்து இடது கை பேட்ஸ்மேன்கள் சிரமப்படுவதை பார்ப்போம். எனவே இங்கிலாந்து ஒரு தந்திரத்தை தவற விட்டு விட்டது.
இங்கிலாந்து சுழற் பந்துவீச்சாளர்கள் லென்த்தை தவற விட்டு விட்டார்கள். இந்த ஆடுகளத்தில் ஏதாவது செய்வதற்கு நீங்கள் லென்த்தை சீராக வைக்க வேண்டும்.
இதையும் படிங்க : “ஜடேஜாவுக்கு இது அலாரம்.. அக்சர்தான் சிறப்பா இருக்கிறார்” – மீண்டும் சீண்டும் மஞ்ச்ரேக்கர்
இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் சரியான லென்த்தில் வீசும் பொழுது அவர்கள் பந்தில் நல்ல சுழற்சி பெற்றார்கள் என்பதை பார்த்தோம். அவர்கள் லென்த்தை தவறாக புரிந்து கொண்டார்கள். பந்து சுழல வேண்டும் என்றால் நீங்கள் முதலில் நம்பிக்கை உடன் இருக்க வேண்டும். ஹார்ட்லி தன்னுடைய முதல் போட்டியில் விளையாடுகிறார். லீச் சில மாதங்களாக விளையாடவில்லை” எனக் கூறியிருக்கிறார்.