தோனி பாய் எடுத்த அந்த முடிவு.. என் மொத்த கிரிக்கெட் வாழ்க்கையையும் பாதிச்சது – குல்தீப் யாதவ் பேட்டி

0
131
Kuldeep

இந்திய சுழல் பந்து வீச்சு துறையில் அனில் கும்ப்ளேவுக்கு பிறகு அமித் மிஸ்ரா மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளராக கிடைத்தார். ஆனால் லெஜெண்ட் அனில் கும்ப்ளே இடத்தை அவரால் நிரப்ப முடியவில்லை. மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா என விரல் சுழற் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் மகேந்திர சிங் தோனியின் கேப்டன்சி காலத்தில் உருவானது.

பின்பு மாறிவரும் கிரிக்கெட் சூழ்நிலையை உணர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரது சுழல் பந்து வீச்சு கூட்டணியை, மகேந்திர சிங் தோனிக்கு பிறகு கேப்டன் ஆக வந்த விராட் கோலி 2017 ஆம் ஆண்டில் கைவிட்டார். இவர்கள் இருவரும் இந்திய டெஸ்ட் அணியில் மட்டுமே விளையாடக்கூடியவர்களாக மெல்ல மாறினார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் அப்போதைய கேப்டன் விராட் கோலி மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர்களான சாகல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரது கூட்டணியையும் தொடர்ந்து ஆதரித்தார். இந்த ஜோடியின் ஆரம்ப காலகட்ட வெற்றி அதிசயக்கத்தக்க வகையில் இருந்தது. தென் ஆப்பிரிக்க மண்ணில் அப்போது வெள்ளைப் பந்து தொடர்களில் இவர்கள் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தினார்கள்.

இந்த ஜோடி மிகவும் வெற்றிகரமாக இருந்த பொழுது மகேந்திர சிங் தோனி கேப்டனாக இல்லாவிட்டாலும் டிக்கெட் கீப்பராக இருந்து இவர்களை வழி நடத்தி வந்தார். இதற்குப் பிறகு மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற, சாகல் மற்றும் குல்தீப் யாதவ் பந்துவீச்சு கொஞ்சம் கொஞ்சமாக சரிய ஆரம்பித்தது. இந்த நேரத்தில் வெளியே சென்ற ரவீந்திர ஜடேஜா மீண்டும் இந்திய அணிக்குள் ஆல் ரவுண்டர் முறையில் வர ஆரம்பித்தார். எனவே இவர்களில் ஒருவருக்குதான் வாய்ப்பு என்கின்ற சூழ்நிலை உண்டானது.

- Advertisement -

இதில் முதலில் கடுமையாக பாதிக்கப்பட்டது குல்தீப் யாதவாக இருந்தார். சாகலை வைத்துக்கொண்டு இவரை கழட்டி விட்டார்கள். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக வாங்கப்பட்ட இவருக்கு அந்த அணி நிர்வாகம் வாய்ப்புகளும் தராமல், காரணத்தையும் கூறாமல் தொடர்ந்து வைத்திருக்க, இவரது கிரிக்கெட் வாழ்க்கை அங்கேயே முடியும் அளவுக்கு சென்றது. இப்படியான நிலையில் தான் பந்து வீசும் முறையில் சில மாற்றங்களை செய்து கொண்டு, ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு வந்து சிறப்பாக செயல்பட்டு, தற்போது இந்திய அணிக்கு மூன்று வடிவத்திலும் முதன்மை சுழற் பந்துவீச்சாளராக மாறி இருக்கிறார்.

மகேந்திர சிங் தோனியின் ஓய்வு தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை எப்படி பாதித்தது என்று பேசி உள்ள குல்தீப் யாதவ் “தோனி பாய் ஓய்வு பெறாமல் அதிகம் விளையாட வேண்டும் என்று நான் விரும்பினேன். ஏனென்றால் அவர் இருக்கும் பொழுது எங்களுக்கு நல்ல ஆலோசனைகள் வந்தது. நாங்கள் பந்து வீசும்போது எளிதாக இருந்தது. ஆனால் அவர் ஓய்வு பெற்ற பிறகு என்னுடைய செயல்பாடு நன்றாக அமையவில்லை. என் கிரிக்கெட் வாழ்க்கையும் பாதித்தது.

இதையும் படிங்க : நான் ஹர்திக் பாண்டியா மும்பை போறத தடுக்கல.. ஏன்னா காரணம் இதான் – ஆசிஸ் நெக்ரா பேட்டி

உங்களை வழி நடத்தி வந்த ஒருவர் இல்லாமல் போகும்போது, மொத்தமும் உங்கள் தோள் மீது இறங்குகிறது. புதிதாக அவற்றை சமாளிப்பதால் நீங்கள் தடுமாற ஆரம்பிக்கிறீர்கள். என் விஷயத்திலும் இதேதான் நடந்தது. பின்னர் மெதுவாக எல்லாவற்றையும் புரிந்து கொண்டு நான் தற்போது திரும்பி வந்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -