இந்திய அணி டி20 உலக கோப்பை வெல்வதற்கு மற்றொரு முக்கிய காரணமாக அமைந்திருப்பவர் சுழப்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்.
சமீபத்தில் ரோஹித் சர்மா மற்றும் தோனி ஆகியோரில் யார் சிறந்த கேப்டன் என்று குல்தீப்பிடம் கேட்ட கேள்விக்கு சுவாரசியமான பதிலை கூறியிருக்கிறார்.
1983ஆம் ஆண்டு கபில்தேவுக்கு பிறகு இந்திய அணி எந்த ஒரு ஐசிசி தொடரையும் வெல்லாத போது 2007ம் ஆண்டு அதற்கு முற்றுப்புள்ளி கொடுத்தவர் மகேந்திர சிங் தோனி. முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட டி20 உலக கோப்பையை அந்த ஆண்டே வென்று சாதனை படைத்தார். அதற்குப் பிறகு கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழித்து ஒரு நாள் உலகக் கோப்பையை வென்று மகத்தான கேப்டன் என்ற பெருமையும் சேர்த்தார்.
அதற்குப் பிறகு 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் டிராபி, டெஸ்ட் அணியில் நம்பர் ஒன் இடம் என மூன்று வடிவ ஐசிசி கோப்பையையும் பெற்ற ஒரே கேப்டன் என்ற பெருமையையும் படைத்தார். இந்த சூழ்நிலையில் தோனியின் ஓய்வுக்குப் பிறகு விராட் கோலியின் கேப்டன்ஷிப்பில் ஐசிசி தொடரை வெல்லாத இந்திய அணி அதற்குப் பிறகு ரோகித் சர்மாவின் தலைமையில் டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்த சூழ்நிலையில் எம் எஸ் தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் கீழ் விளையாடிய சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவிடம், இந்த இருவரில் யார் சிறந்த கேப்டன் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறி இருப்பதாவது “இதை முதலில் ஒப்பிடவே முடியாது. ஏனென்றால் இந்த இருவருக்கும் அணியில் ஒவ்வொரு காலகட்டங்கள் இருந்தன. இருவருமே தங்களது சொந்த வழியில் அணியை நடத்தி வெற்றி பெற வைத்துள்ளனர். எம் எஸ் தோனி இந்தியாவை வழிநடத்தும் வாய்ப்பை பெற்று மூன்று வடிவிலான ஐசிசி கோப்பையையும் இந்தியாவுக்காக வென்று கொடுத்திருக்கிறார்.
ரோகித் பாய் இந்தியாவை அழகாக வழி நடத்தியுள்ளார். அதற்கான வாய்ப்பு கிடைத்த போது இந்தியாவுக்காக டி20 உலக கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக பட்டங்களும் வென்று இருக்கிறார். இந்தியாவை வழிநடத்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2023 ஒரு நாள் உலகக் கோப்பை என அனைத்தையும் சிறப்பாக வழி நடத்தி கடைசியாக டி20 உலக கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க:11 பவுண்டரி.. தனியாளாய் தண்ணி காட்டிய யூசுப் பதான்.. இந்தியா சாம்பியன்ஸை ஆஸ்திரேலியா அணி வென்றது
இவர்கள் இருவருமே அணியை அழகாக வழி நடத்தியுள்ளனர். இதில் ஒப்பிடுவது சரியாக வராது. ஏனெனில் நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு பெறுபவர் தனது அணிக்காக உழைத்து வெற்றி பெற வைத்திருக்கின்றனர். எனவே இதை ஒப்பிடுவது தவறு” என்று கூறி இருக்கிறார்.