இங்கிலாந்தில் தற்பொழுது முன்னாள் வீரர்கள் பங்குபெறும் உலக லெஜென்ட்ஸ் சாம்பியன்ஷிப் டி20 லீக் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன் அணியும் பிரட் லீ தலைமையிலான ஆஸ்திரேலிய சாம்பியன்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.
இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்தியா சாம்பியன்ஸ் அணியின் கேப்டன் யுவராஜ் சிங் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஷான் மார்ஸ் 27 பந்துகளில் 41 ரன்கள், பெர்குஷன் 22 பந்தில் 26 ரன்கள், பென் கட்டிங் 13 பந்தில் 24 ரன்கள் எடுத்தார்கள்.
ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிக்கு பேட்டிங்கில் ஐந்தாவது இடத்தில் வந்த டேன் கிறிஸ்டியன் வெறும் 33 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் உடன் 69 ரன்கள் அடித்து நொறுக்கினார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது.
200 ரன்கள் என்கின்ற மெகா இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்த இந்தியா சாம்பியன்ஸ் அணிக்கு ராபின் உத்தப்பா 9 பந்தில் 12 ரன், இர்பான் பதான் 7 பந்தில் 9 ரன், சுரேஷ் ரெய்னா 10 பந்தில் 12 ரன், கேப்டன் யுவராஜ் சிங் 18 பந்தில் 19 ரன், பவான் நெகி 10 பந்தில் 11 ரன், அம்பதி ராயுடு 17* பந்தில் 26 ரன், ஹர்பஜன் சிங் 1 பந்தில் 4* ரன் எடுத்தார்கள்.
இந்தியா சாம்பியன் அணியின் பேட்டிங்கில் எல்லாம் முன்னணி வீரர்களும் சொற்ப ரன்கள் எடுத்த போதும், பேட்டிங் வரிசையில் ஐந்தாவதாக வந்த யூசுப் தான் தனி ஆளாக நின்று ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிக்கு தண்ணி காட்டினார். 48 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உடன் 78 ரன்கள் குவித்து இறுதி ஓவரில் ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க : முக்கிய 3 இந்திய வீரர்களுக்கு ஓய்வு.. இலங்கை ரசிகர்கள் நிம்மதி.. வெளியான பின்னணி காரணம்
இந்தியா சாம்பியன்ஸ் அணி 20 ஓவர்கள் முழுமையாக விளையாடி ஆறு விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணி இறுதியாக 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் பந்துவீச்சு தரப்பில் பீட்டர் சிடில் மற்றும் நாதன் பில்டர் நைன் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.






