வெறும் 83 ரன்.. அஷ்வின் இடத்தில் குல்தீப் அசத்தல்.. குக் பேச்சுக்கு இந்திய அணி பதிலடி

0
279
Kuldeep

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை தற்போது எட்டி இருக்கிறது.

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் 445 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் நேற்று என்பத்தி எட்டு பந்துகளில் சதம் அடித்தார்.

நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 27 ரன்கள் எடுத்து வலிமையான நிலையில் இருந்தது.

இன்று துவங்கி நடைபெறும் ஆட்டத்தில் மதிய உணவு இடைவேளையிலேயே இங்கிலாந்து அணி 400 ரன்கள் தொட்டு விடும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக் பேசியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இன்று துவங்கி நடைபெற்ற ஆட்டத்தில் பும்ரா ஜோ ரூட்டை மீண்டும் ஒருமுறை ஆட்டம் இழக்க வைத்தார். ஜோ ரூட் 18 ரன்களில் வெளியேறினார்.

இதற்கு அடுத்து அஸ்வின் இல்லாத நிலையில் பொறுப்பை எடுத்துக் கொண்ட குல்தீப் யாதவ் முதல் ஸ்டேஷன் முழுவதும் பந்துவீசி இங்கிலாந்து அணிக்கு கடுமையான நெருக்கடியை கொடுத்தார். அவர் கையில் இருந்து பந்து நன்றாக வெளியேறியது.

பும்ரா ஜோ ரூட்டை வெளியேற்றியதும் உள்ளே வந்த ஜானி பேர்ஸ்டோவை ரன்கள் குல்தீப் யாதவ் வெளியேற்றினார். இதற்கு அடுத்து சதத்தை தாண்டி 153 ரன்கள் எடுத்திருந்த பென் டக்கெட்டை ஒரு எளிமையான பந்தின் மூலம் வெளியேற்றி இங்கிலாந்து அணிக்கு பெரிய ஏமாற்றத்தை தந்தார்.

இன்று மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்திருக்கிறது. அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 39, பென் ஃபோக்ஸ் 6 ரன்கள் என ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார்கள்.

இதையும் படிங்க : திரும்ப வந்த ருதுராஜ்.. தனியாளாக போராடி 96 ரன்.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு நல்ல செய்தி

இங்கிலாந்து அணி இன்று முதல் செசனில் 83 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பந்துவீச்சாளர்கள் குறிப்பாக பும்ரா மற்றும் குல்திப் யாதவ் மிகக் கட்டுப்பாடாகப் பந்து வீசி விக்கெட்டுகளையும் கைப்பற்றி, அப்பொழுது இந்திய அணியை போட்டிக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்!