27 பந்து 84 ரன்.. ஐபிஎல் டெல்லி வரலாற்றில் ஜாக் பிரேசர் மெக்கர்க் மகத்தான 2 சாதனை.. அசுரத்தனமான பேட்டிங்

0
732
McGurg

நடப்பு ஐபிஎல் 17ஆவது சீசனின் 43வது போட்டியில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். மும்பை அணியில் ஜெரால்ட் கோட்சி இடத்தில் லூக் வுட் இடம் பெற்றார். டெல்லி அணியில் துவக்க ஆட்டக்காரர் பிரிதிவிஷா இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக குமார் குஸ்கரா இடம் பெற்றார்.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்ய வந்த டெல்லி அணிக்கு ஆஸ்திரேலியாவின் இளம் துவக்க ஆட்டக்காரர் ஜாக் பிரேசர் மெக்காரக் அதிரடியான துவக்கத்தை கொடுத்தார். மூன்றாவது ஓவரின் மத்தியிலேயே டெல்லி அணி 5 ரன்கள் கடந்தது. பும்ரா முதற்கொண்டு யாரையும் விட்டு வைக்காமல் விளாசினார்.

தொடர்ந்து விளையாடிய அவர் 15 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உடன் அதிரடியாக சதம் அடித்தார். நடப்பு ஐபிஎல் இரண்டாவது முறையாக 15 பந்துகளில் அரை சதம் அடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பவர் பிளேவின் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பில்லாமல் 92 ரன்கள் குவித்தது.

இதையும் படிங்க : நீ வந்து பண்ண சம்பவம்தான் மாஸ் தம்பி.. ஷஷாங்க் சிங் ஜானி பேர்ஸ்டோ போட்டிக்கு பின் உரையாடல்

- Advertisement -

சிறப்பாக விளையாடிய ஜாக் பிரேசர் மெக்கர்க் வெறும் 27 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 84 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். டெல்லி கேப்பிடல் அணி முதல் விக்கெட்டை 7.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து இழந்தது. வெறும் 46 பந்துகளில் இந்த 114 ரன்கள் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் ஜாக் பிரேசர் மெக்கர்க் ஒரே ஐபிஎல் தொடரில் இரண்டு முறை பதினைந்து பந்துகளில் அரை சதம் அடித்த முதல் வீரர் என்கின்ற சாதனையையும், மேலும் ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அணிக்காக பவர் பிளேவுக்குள் அரைசதம் அடித்த முதல் வீரர் என்கின்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.