பாவம் அந்த 2 பசங்க.. கேஎல் ராகுல் பண்ட் வரதால பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காது – ஸ்ரீகாந்த் வருத்தம்

0
351

இந்திய கிரிக்கெட் அணி வருகிற 19ஆம் தேதி முதல் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்காக முன்னணி இந்திய வீரர்கள் தற்போது அணிக்கு திரும்பியிருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் முன்னாள் இந்திய வீரரும், தேர்வு குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தற்போதைய இந்திய அணி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய நிலையில் அதனை கைப்பற்றி தற்போது சொந்த மண்ணில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணிக்கு விராட் கோலி, பும்ரா, கே எல் ராகுல் ரிஷப் பண்ட் போன்ற மூத்த வீரர்கள் இந்திய அணிக்கு திரும்பி இருக்கின்றனர்.

வங்கதேசம் அணிக்கு எதிரான தொடர் மட்டும் இல்லாமல் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என இந்தியாவுக்கு மிக நீண்ட டெஸ்ட் தொடர் இருப்பதால் இங்கிலாந்து தொடரில் இடம் பெற்ற இளம் வீரர்கள் வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்படலாம் என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து ஸ்ரீகாந்த் விரிவாக கூறும்போது “நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் நான் இளம் வீரர் சர்பராஸ்கானுக்காக வருத்தம் அடைகிறேன். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இது போன்ற நடப்பது இயல்புதான். நீங்கள் நன்றாக விளையாடியிருந்த போதிலும் பெரிய வீரர்களின் வருகையால் சில நேரங்களில் உங்களுக்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போகலாம். உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் வருகையால் துருவ் ஜூரேல் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் தங்கள் இடத்தை இழக்க நேரிடலாம்.

ஆனால் மனதின் பின்பகுதியில் இந்தியா இனி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும் என்ற எண்ணமும் ஓடுகிறது. கே எல் ராகுல் சிறப்பாக வெளிநாடுகளில் செயல்பட்டு இருக்கிறார், அது மட்டும் அல்லாமல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். எனவே இது மோசமாக இருப்பதாக தெரியவில்லை” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:100 இல்ல 200 சதவீதம்.. பும்ரா வீசுறப்போ பதட்டமா இருந்துச்சு.. அப்போ இவர்தான் ஹெல்ப் பண்ணாரு – ஆர்சிபி அனுஜ் ராவத் பேட்டி

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தும் அசத்தி இருந்தார். கடந்த இரண்டு பயணங்களாக இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக சதம் அடித்தும் தனது திறனை நிரூபித்திருக்கிறார். எனவே இனிவரும் தொடர்களிலும் சிறப்பாக செயல்படுவார் என்று நம்பலாம்.

- Advertisement -