அஸ்வின் இப்ப சாம்பியன் இல்ல.. சிஎஸ்கே அவரை கைவிடணும்.. கோடிகள் கிடைக்கிறப்ப நல்லா இருக்கா? – ஸ்ரீகாந்த் கருத்து

0
81
Srikanth

சிஎஸ்கே அணி நிர்வாகம் ரவிச்சந்திரன் அஸ்வினை வெளியே விடும் நிலையில் இருப்பதாகவும், தற்போது அவர் சாம்பியன் பிளேயர் கிடையாது எனவும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.

மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் தாமாகவே சிஎஸ்கே அணியை விட்டு வெளியேற விரும்புவதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது. இத்துடன் அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கி கேப்டனாக மாற்ற முயற்சி செய்கிறது என்றும் பேசப்படுகிறது.

- Advertisement -

இது தமிழ்நாடு கிரிக்கெட் கிடையாது

இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “அஸ்வின் செய்திருக்கும் அனைத்து சாதனைகளுக்காகவும் அவரை நாம் மிகவும் மதிக்கிறோம். அவர் தமிழ்நாடு, சிஎஸ்கே மற்றும் இந்திய அணிக்காக நிறைய சாதனைகளை படைத்திருக்கிறார். ஆனால் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இது உரிமையாளர்கள் அணியின் விளையாட்டு. இது தமிழ்நாட்டு கிரிக்கெட் கிடையாது”

“கடந்த காலங்களில் சிறந்தவர் என்றாலும் இப்பொழுது சாம்பியன்ஷிப் வெல்லப் போகிறார் என்று அர்த்தம் அல்ல. சிஎஸ்கே அணி நிர்வாகம் புதிய இளம் அணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அவர்களை தற்போது பார்க்கும் பொழுது பேட்டிங் யூனிட்டில் இளம் வீரர்கள் வருகையால் வலிமையாக இருக்கிறார்கள். தற்போது அவர்களுக்கு சிறந்த பந்துவீச்சாளர்கள் தேவைப்படுகிறார்கள். எனவே இதைப் பெறுவதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியேற வேண்டி இருக்கும்”

- Advertisement -

இது கார்ப்பரேட் விளையாட்டு

“அஸ்வினை இன்னும் ஜாம்பவான் என்று சொல்லிக் கொண்டே இருக்க போகிறீர்களா? நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அவர் விளையாடிய பொழுதே வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. நாள் முடிவில் இது உரிமையாளர்கள் விளையாட்டு. இங்கு இதற்கெல்லாம் இடம் கிடையாது”

இதையும் படிங்க : 601 ரன் 28 ஓவரில் முடிந்த கதை.. நியூசி டெஸ்ட் வரலாற்றில் புது சாதனை.. ஜிம்பாப்வே அணி பரிதாப தோல்வி

“விஷயம் என்னவென்றால் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது தொழில் வாழ்க்கையில் பின்தங்கிய நிலையில் இருக்கிறார். அவர் அந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். ஆனாலும் உரிமையாளர்களின் விளையாட்டாக மாறி உள்ள கார்பரேட் விளையாட்டில் இப்படி நடப்பதெல்லாம் சகஜம். விளையாட்டு தான் உங்களுக்கு கோடிக்கணக்கான பணத்தையும் தருகிறது. தேவைப்படாத பொழுது நீக்கவும் செய்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -