ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 359 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்திருக்கிறது.
நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் சேராத 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு ஜிம்பாப்வே சென்று இருக்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியை வென்று நியூசிலாந்து முன்னிலை வகித்து வந்தது.
பிரம்மாண்ட ரன் குவித்த நியூசிலாந்து
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 48.5 ஓவரில் 125 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. அதிகபட்சமாக அந்த அணிக்கு ப்ரண்டன் டெய்லர் 44 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணிக்கு கான்வே 153, ஹென்றி நிக்கோலஸ் 150 ரன், ரச்சின் ரவீந்தரா 165 ரன்கள் என ஆட்டம் இழக்காமல் எடுத்தார்கள். அந்த அணி 130 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் குவித்தது. மேலும் இன்று மூன்றாவது நாள் பேட்டிங் செய்யாமல் டிக்ளர் செய்தது.
நியூசிலாந்து வரலாற்று சாதனை
ஜிம்பாப்வே அணி 376 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வெறும் 28 ஓவர்களில் 117 ரன்கள் எடுத்து மீண்டும் சுருண்டது. நியூசிலாந்து சகாரி போல்க்ஸ் ஐந்து விக்கெட் கைப்பற்றினார். மேலும் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச இன்னிங்ஸ் ரன் வித்தியாச வெற்றி இதுவாக பதிவாகி இருக்கிறது. மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச இன்னிங்ஸ் ரன் வித்தியாசத்தில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.
இதையும் படிங்க : 4 புள்ளிகளை குறைப்போம்.. ஐசிசி எச்சரிக்கையை மீறி கம்பீர் கில் செய்த சம்பவம்.. செம மூவ் ரசிகர்கள் பாராட்டு
டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றி
இன்னிங்ஸ் & 579 ரன்கள் இங்கிலாந்து -ஆஸ்திரேலியா – ஓவல் – 1938
இன்னிங்ஸ் & 360 ரன்கள் – ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா – ஜோகன்னஸ்பர்க் – 2002
இன்னிங்ஸ் & 359 ரன்கள் – நியூசிலாந்து – ஜிம்பாப்வே – புலவாயோ – 2025
இன்னிங்ஸ் & 336 ரன்கள் – வெஸ்ட் இண்டீஸ் – கொல்கத்தா – 1958/59






